நம்முடைய இலக்கான பரமநேசராகிய கிறிஸ்துவின் சாயலை அடைவதற்குப் பலியின் ஜீவியம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதைக்குறித்துத் தனிப்பட்ட ஜீவியத்தில் பேருதவியாக இருந்த ஒரு கட்டுரை தான் – பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா?
Bible Names Dictionary helps you to get the spiritual meaning for biblical names, symbols, numbers in Kannada language.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இக்கட்டுரையானது, பாஸ்டர் ரசல் அவர்கள் மரிப்பதற்கு 8 நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 23, 1916 அன்று, கால்வெஸ்டன் டெக்சாஸில் பேசின கடைசிப் பதிவு செய்யப்பட்ட பிரசங்கத்தினுடைய சகோ.மென்டா ஸ்டர்ஜன் அவர்களின் ஓர் எழுத்துப்படியாகும் (transcript). ஆசீர்மிகு இக்கட்டுரையைச் சகோதர சகோதரிகள் தியானித்துப் பயன்பெறும்வகையில், தமிழாக்கம் செய்யப்பட்டு, அரிய புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு, தாழ்மையிலும், அன்பிலும், ஜெபத்தோடும் பகிரப்படுகின்றது.
அன்பானவர்களே! நாம் அறிவுபெருத்த காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். அறிவினைச் சரியாகப் பயன்படுத்தாவிடில் அழிவிற்கே வழிவகுக்கும். அப்படிப்பட்ட ஒன்று தான் பாலியல் சம்பந்தமான அறிவும். நாம் பெலவீன மாம்சத்திலிருக்கின்றோம். எளிதில் இரகசியமாக, பாவத்தில் விழும் கண்ணியாக இப்பாலியல் சார்ந்த காரியங்கள் இருக்கின்றன. இக்காரியத்தில் பலர் இழுப்புண்டு புதுச்சிருஷ்டி ஜீவியத்தில் தொய்ந்துப்போய் எவ்வாறு மேற்கொள்வது என்று தெரியாமல் நிற்கின்றனர். இதில் வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் எனப் எப்பாகுபாடுமின்றி அனைவருமே அதன் தாக்கத்திற்குள்ளாகுகின்றனர்.
சுமார் 112 ஆண்டுகளுக்கு முன்பு, 1910 – ஆம் வருஷம், ஜூன் 5 – ஆம் தேதியன்று, பாலஸ்தீனத்திற்குப் பிரயாணம் செய்துவந்தவுடனே அமெரிக்காவில் சகோ. ரசல் அவர்கள் யூதர்களும் குழுமியிருந்த கூட்டத்தின் மத்தியில் “எருசலேம்” எனும் இந்தப் பிரசங்கத்தைப் பிரசங்கித்தார்.
வேதாகமத்தைக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு சிறுபிராயமே ஏற்றது என்று வேதாகமம் போதித்தாலும், சிறுவர்கள் அதிலுள்ள செய்திகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதற்கு வேதாகமம் எளிமையாக எழுதப்படவில்லை. வேதாகமத்திலுள்ள போதனைகளையும், கதைகளையும் புரிந்துகொள்ளும்படியாக அவைகளை எளிய நடையில் கொடுப்பதே, “நிஜமாகும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” என்ற புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகும்.