வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2010 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
முதல் பஸ்கா, யோவான் சாட்சி, இரண்டாம் மற்றும் மூன்றாம் பஸ்கா, நடுவில் உள்ள பஸ்காக்கள்…
போக்காட்டினால் சுமக்கப்படும் பாவங்கள் (போக்காட்டினால் சுமக்கப்படும் பாவங்கள் தொடர்பாக சகோ. ரசல் அவர்களினால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின்
தொகுப்பு மற்றும் மொழியாக்கம்)
இப்புத்தகமானது அநேக வேதாகம அகராதிகளின் விளக்கங்கள் மற்றும் சகோ. ரசல் அவர்கள் எழுதிய பிரதிகளில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பாடங்கள் எட்டு வயது மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களுக்கு பகிரும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற ஒர் அற்புதமான காதாபாத்திரத்தின் வாழ்க்கைப் பற்றின தொகுப்பாகும். அக்காதாபாத்திரம் தலை மற்றும் சரீரமாகிய கிறிஸ்துவின் நிழலான யோசேப்பு ஆகும். நமக்கு அடையாளமாக இருக்கக்கூடிய யோசேப்புடைய வாழ்க்கையின் சம்பவங்களையும் அதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகளையும் புரிந்து பயனடையும் வகையில் சகோதரர் ரசல் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து இப்புத்தகம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
அன்பானவர்களே! நாம் அறிவுபெருத்த காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். அறிவினைச் சரியாகப் பயன்படுத்தாவிடில் அழிவிற்கே வழிவகுக்கும். அப்படிப்பட்ட ஒன்று தான் பாலியல் சம்பந்தமான அறிவும். நாம் பெலவீன மாம்சத்திலிருக்கின்றோம். எளிதில் இரகசியமாக, பாவத்தில் விழும் கண்ணியாக இப்பாலியல் சார்ந்த காரியங்கள் இருக்கின்றன. இக்காரியத்தில் பலர் இழுப்புண்டு புதுச்சிருஷ்டி ஜீவியத்தில் தொய்ந்துப்போய் எவ்வாறு மேற்கொள்வது என்று தெரியாமல் நிற்கின்றனர். இதில் வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் எனப் எப்பாகுபாடுமின்றி அனைவருமே அதன் தாக்கத்திற்குள்ளாகுகின்றனர்.