Bible Students India

0
Page

₹O

நினைவுகூறுதலின் தியானங்கள்

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த இந்த ஆய்வைத் தவிர, வேறு எந்த ஆய்வும் கிறிஸ்தவனுடைய இருதயத்தை தொடுகிறதாய் இராது. இயேசுவின் தலை மற்றும் பாதங்களை மரியாள் அபிஷேகிப்பது துவங்கி, கல்லறையிலிருந்துள்ள நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதல் வரையிலான சம்பவங்களை உள்ளடக்கியதான நினைவுகூருதல் காலப்பகுதியைப்பார்கிலும், வேறு எந்தக் காலப்பகுதியும் அதிகமான பயபக்தியுடன் கைக்கொள்ளப்படுவதில்லை.

அப்பம் மற்றும் திராட்சப்பழரசம் எனும் அடையாளங்களில் பங்கெடுப்பதன் மூலம் மாத்திரமல்லாமல், சரித்திரத்தின் அந்த உச்சகட்ட சம்பவங்கள் அடங்கின வார்த்தைகளையும், அந்தவாரம் மாபெரும் பலியுடன் நிறைவுப்பெற்றதை, பயபக்தியுடன் கருத்தூன்றிப் பார்ப்பதற்கென்றும் பாஸ்டர் ரசல் அவர்களால் எழுதப்பட்டுள்ளதான பெரும்பாலான வார்த்தைகளை கொண்டு – பஸ்கா தொடர்புடையதான கட்டுரைகள் பிரதானமாய்த் தனிப்பிரிவுகளிலும், வெற்றி பிரவேசம் தொடர்புடைய கட்டுரைகள் முக்கியமாக இன்னொரு பிரிவின் கீழும், இப்படியாக பல பிரிவுகளின் கீழும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

Facebook
WhatsApp
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published.