W3.CSS
Pages : 258
File Size : 7MB
Uploaded : 11 April 2021
Publisher : Bible Student India
Uploaded By : Admin

மழலையர் மன்னா 2வது தொகுப்பு

“பிள்ளைகள் பெற்றோருக்கல்ல; பெற்றோர்களே பிள்ளைகளுக்கு, பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்.” 2கொரிந்தியர் 12:14

ஒரு நல்லத் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு, கர்த்தருக்கு பயப்படுதல் இன்னதென்று போதிப்பதையே, தன் பிள்ளையின் இருதயத்தை பாதுகாக்கும் ஒரே வழி என்று தெரிந்திருக்கிறபடியால் அந்த சுதந்திரத்தை தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்கிறான்.

6 வயது முதல் 10 வயது வரையுள்ள சிறு பாலகர்கள் நல்ல முத்துக்களை (விலையேறப் பெற்ற சத்திய பாடங்களை) சேகரித்து, தங்கள் நல்ல இருதயமாகிய பொக்கிஷ சாலையில் சேர்த்துவைப்பதற்காக உண்டாக்கப்பட்ட சத்திய பெட்டகமாக “மழலையர் மன்னாவின் இந்த 2-வது தொகுப்பு” அமைந்துள்ளது. ஆதியாகமம் முதல் வெளி விசேஷம் வரையுள்ள ஒட்டுமொத்த தெய்வீக திட்டங்களின் தொகுப்பாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மூன்று உலகங்கள், ஐந்து உலகப் பேரரசுகள், முற்பிதாக்களின் வாழ்க்கை, இஸ்ரயேலர்களின் வனாந்திரப் பிரயாணம், அவர்களை வழிநடத்திய நியாயாதிபதிகள், இராஜாக்கள், தீர்க்கதரிசிகள், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள், பாவம் செய்யத் தூண்டிய சாத்தான் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி வரை இப்படியாக 75 பாடங்கள் கொண்ட தொகுப்பாக, குழந்தைகளுக்கேகுரிய ஞானத்திலும், அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்த புத்தகம் அமையப் பெற்றுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *