W3.CSS
Pages : 141
File Size : 12.1MB
Uploaded : 11 April 2021
Publisher : Bible Student India
Uploaded By : Admin

மகா மேன்மையும், அருமையுமானவாக்குத்தத்தங்கள்

அவருடைய மகா மேன்மையும், அருமையுமானவாக்குத்தத்தங்கள் அவருடைய இரக்கத்தின் தூதுவர்களாக இருந்து நமக்கு ஊழியம் புரிந்து, நம்மை பலம் உடையவர்களாக்குகின்றது. நாம் எவ்வளவாய் வாக்குத்தத்தங்களை நம் மனதுக்கு முன்பாய் வைக்கின்றோமோ, அவ்வளவாய் இந்த நெருக்கமான வழியில் ஓட பலமும், துணிவும் பெற்றிருப்போம். உண்மையான தேவபக்திக்குள் நடத்துவதில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களைப் பார்க்கிலும், பெரிதான தூண்டுதல் வேறொன்றும் இருக்க முடியாது.

கர்த்தருடைய ஜனங்களின் இருதயம் கவலையிலிருந்து முழுமையான விடுதலையை அடையும் பொருட்டு, தெய்வீகப் பாதுகாப்பு குறித்தான அருமையான வாக்குத்தத்தங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். யாரெல்லாம் தெய்வீக வாக்குத்தத்தங்கள் அனைத்தின் மீதும் முழு நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் வெற்றியின் மேல் வெற்றியும், ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதமும், சந்தோஷத்தின் மேல் சந்தோஷமும், சாதனையின் மேல் சாதனையும், இறுதியாக உலகம், மாம்சம் மற்றும் எதிராளியானவனிடமிருந்து மகத்துவமான வெற்றியை நம்மை நேசித்து, நம்மை கிரயம் கொடுத்து வாங்கினவருடைய புண்ணியத்தின் மூலமாக அடைவர். கோலியாத் தாவீதின் கூழாங்கல்லுக்கு முன்பாக வலிமையிழந்து போனது போல, இந்த வகுப்பினர் முன்பு, எதிர்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையாகிய இராட்சதர்களும் வலிமையிழந்துவிடுவர். தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்குள் அதிகமதிகமாய் ஆழமான ஆராய்ச்சி செய்யுங்கள். இப்படி நீங்கள் செய்தால், விசுவாசத்தின் வேர்கள்

ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி எடுத்து, அதை உங்கள் ஜீவனுக்குள் அனுப்பி, போஷிக்கப்பட்டதினால் மரங்கள் வளர்வது போல் நீங்களும் வளருவீர்கள். இதனாலேயே நீங்கள் விசுவாசத்தில் நிலைகொள்வீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *