VIEWS

PageS
0

தீர்க்கதரிசனத்தில் சீயோனியம்

சுமார் 112 ஆண்டுகளுக்கு முன்பு, 1910 – ஆம் வருஷம், ஜூன் 5 – ஆம் தேதியன்று, சகோ. ரசல் அவர்கள் ஆற்றின “யூதருக்குரிய நம்பிக்கைகள் – எருசலேம்” எனும் பிரசங்கம், பல யூதர்களுடைய கவனத்தை ஈர்த்ததினால், யூதருக்கு ஒரு நண்பனாயிருந்த சகோ. ரசல் ஐயா அவர்களுக்கு, அக்டோபர் 9, 1910 அன்று, பிரம்மாண்ட அரங்கமாகிய நியூயார்க்கின் ஹிப்போட்ரோமில் யூதரின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், “தீர்க்கதரிசனத்தில் சீயோனியம்” எனும் தலைப்பின்கீழ் உரையாற்றும்படிக்கு யூதர்களிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

மீண்டும் கூட்டிச்சேர்க்கப்பட்டு வந்துகொண்டிருந்த ஆபிரகாமின் பூமிக்குரிய சந்ததியை, ஆவிக்குரிய சந்ததி சந்தித்து, வேதவாக்கியங்களைக்கொண்டு ஆற்றித்தேற்றி, அவர்களுக்கு அவர்களது மேசியாவையும், புதிய எருசலேமின் தீர்க்கதரிசனத்தையும் சுட்டிக்காட்டின அத்தருணம், வேத மாணவர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு தருணமாக இருந்தது; அன்று சுமார் 4,000 ஆர்வமிகு யூதர்களுக்கு நமது சகோதரர் உரையாற்றும்படிக்குத் தேவ அனுமதி கிடைத்தது.
அனைவரும் படித்து பயன்பெறும்வகையில், அரிய மற்றும் புரிதலுக்கான புகைப்படங்களும், சிறுகுறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ள இப்புத்தகத்தை ஜெபத்துடன் தாழ்மையாகப் பகிர்ந்துகொள்கிறோம் பிரியமானவர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *