
நினைவுகூருதலின் தியானங்கள்
Pages : | 1144 |
File Size : | 50MB |
Uploaded : | 11 April 2021 |
Publisher : | Bible Student India |
Uploaded By : | Admin |
நினைவுகூருதலின் தியானங்கள்
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த இந்த ஆய்வைத் தவிர, வேறு எந்த ஆய்வும் கிறிஸ்தவனுடைய இருதயத்தை தொடுகிறதாய் இராது.
இயேசுவின் தலை மற்றும் பாதங்களை மரியாள் அபிஷேகிப்பது துவங்கி, கல்லறையிலிருந்துள்ள நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதல் வரையிலான சம்பவங்களை உள்ளடக்கியதான நினைவுகூருதல் காலப்பகுதியைப்பார்கிலும், வேறு எந்தக் காலப்பகுதியும் அதிகமான பயபக்தியுடன் கைக்கொள்ளப்படுவதில்லை.
பழைய ஏற்பாட்டின் சரித்திரத்தில் இடம்பெறும் பஸ்கா காரியத்தினை தேவனுடைய குமாரனால் ஈடுபலி கொடுக்கப்பட்டதிலுள்ள அதன் நிறைவேறுதலுடன் இணைக்கும் இந்த ஆய்வு கட்டுரைகளானது ஈடுபலியினுடைய புனித “சிவப்பு நூலையும் மற்றும் “மனித சரித்திரம் அனைத்தின் திருப்புமுனை” ஆகிய – கல்வாரியில் நிகழ்ந்த பலியையும் கையாளுகின்றதாய்க் காணப்படுகின்றது.
அப்பம் மற்றும் திராட்சப்பழரசம் எனும் அடையாளங்களில் பங்கெடுப்பதன் மூலம் மாத்திரமல்லாமல், சரித்திரத்தின் அந்த உச்சகட்ட சம்பவங்கள் அடங்கின வார்த்தைகளையும், அந்தவாரம் மாபெரும் பலியுடன் நிறைவுப்பெற்றதை, பயபக்தியுடன் கருத்தூன்றிப் பார்ப்பதற்கென்று இந்த ஆசரிப்பிற்கு முந்தின பல வாரங்களைச் செலவழிப்பதன் மூலம், அநேக வேத மாணாக்கர்கள் இந்நிகழ்வை நினைவுகூர்ந்து ஆசரிக்கின்றனர்.
இந்த ஒரு புத்தகத்தின் கட்டுரைகளானது, இத்தலைப்புக் குறித்து பாஸ்டர் ரசல் அவர்களால் எழுதப்பட்டுள்ளதான பெரும்பாலான வார்த்தைகளை கொண்டு – பஸ்கா தொடர்புடையதான கட்டுரைகள் பிரதானமாய்த் தனிப்பிரிவுகளிலும், வெற்றி பிரவேசம் தொடர்புடைய கட்டுரைகள் முக்கியமாக இன்னொரு பிரிவின் கீழும், இப்படியாக பல பிரிவுகளின் கீழும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
Share via: