Share via:
0
Shares
Share via:
நம்முடைய இலக்கான பரமநேசராகிய கிறிஸ்துவின் சாயலை அடைவதற்குப் பலியின் ஜீவியம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதைக்குறித்துத் தனிப்பட்ட ஜீவியத்தில் பேருதவியாக இருந்த ஒரு கட்டுரை தான் – பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா?
யூதர்கள் தங்களுடைய யூதப் பாரம்பரியத்தின்படி, யூத மாதமாகிய இயார் மாதம், 5 – ஆம் தேதியைத் தங்களுடைய சுதந்திர தினமாகக் கொண்டாடிவருகிறார்கள்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஆமோஸைக்கொண்டு, இஸ்ரயேல் தேசத்தில் நிகழக்கூடிய தானிய மற்றும் திராட்சை பழ விளைச்சல் மற்றும் அறுவடையைப் பற்றியும், அதற்கு ஒப்பாகக் கடைசிநாட்களில் நடக்கவிருக்கும் ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய விளைச்சல் மற்றும் ஆறுவடையைப் பற்றியும் ஒரு உவமையின் மூலமும் நிழல்-பொருள் முறையிலும் எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கும், காலத்திற்கு ஏற்ற ஒரு மன்னா இப்பாடமாகும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இக்கட்டுரையானது, பாஸ்டர் ரசல் அவர்கள் மரிப்பதற்கு 8 நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 23, 1916 அன்று, கால்வெஸ்டன் டெக்சாஸில் பேசின கடைசிப் பதிவு செய்யப்பட்ட பிரசங்கத்தினுடைய சகோ.மென்டா ஸ்டர்ஜன் அவர்களின் ஓர் எழுத்துப்படியாகும் (transcript). ஆசீர்மிகு இக்கட்டுரையைச் சகோதர சகோதரிகள் தியானித்துப் பயன்பெறும்வகையில், தமிழாக்கம் செய்யப்பட்டு, அரிய புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு, தாழ்மையிலும், அன்பிலும், ஜெபத்தோடும் பகிரப்படுகின்றது.
சுதந்திரத்தை பல்வேறு முறைகளில் வரையறுக்கலாம். சிறையில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் தன் விருப்பப்படி போய் வருவதற்கான சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். சர்வாதிகார ஆட்சியின் கீழ் ith இருக்கும் ஒருவர் தனது மனதில் இருப்பதை பேசும் சுதந்திரத்தை விரும்பலாம். குற்ற உணர்ச்சியுடன் வாழும் ஒருவர் தனது தவறை ஒப்புக்கொண்டு குற்ற உணர்ச்சி என்னும் கொடிய உணர்விலிருந்து விடுபட விரும்பலாம்.
தேவனுடைய திட்டத்தின் கீழ், மனிதன் ஒரு பயணத்தில் இருக்கிறான். தன்னை சிறையில் அடைக்கும் ஒவ்வொரு சக்தியின் அடக்கு முறையிலிருந்தும் விடுதலை பெற விரும்பிய பயணமே அது. சுதந்திரம் தெய்வீக நியமங்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை தேவன் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். அப்போது தான் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு சபைகள் ஆதியிலே
இயேசு பேசும்போது, நாம் அனைவரும் கேட்க விரும்புகிறோம். வேறு எங்கிருந்து சிறந்த ஆலோசனை நமக்கு கிடைக்கும்?
இயேசு நம்முடைய சொந்த சபைக்கு நேரடியாக ஒரு செய்தியைச் சொல்வதாக கற்பனைச் செய்துப் பாருங்கள். கவனத்துடன், ஆர்வத்துடன், சிந்தனையுடன். தீவிரமாக அதனை கேட்டு, பின்னர் அந்த ஆலோசனையை நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உடனடியாகப் பயன்படுத்தயார் விரும்ப மாட்டார்கள்?
கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் ஆசியா மைனரில் ஏழு கிறிஸ்தவ சமூகங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதம் அது. ஒவ்வொரு பகுதியின் தலைவருக்கு அனுப்பப்பட்ட இந்த செய்திகளைக் கொண்டு செல்லும் வழியாக அப்போஸ்தலனாகிய யோவான் இருந்தார்.
கடைசியாக மீதமுள்ள அப்போஸ்தலரால் அனுப்பப்பட்ட ஒரு நீண்ட கடிதத்துடன் ஒரு தபால் வந்ததாக கற்பனைச் செய்து பாருங்கள். ஆனால் யோவானின் நற்செய்தி அல்லது அவரது நிருபம் போலல்லாமல், இந்த கடிதம் எஜமானாகிய, இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வந்தது. பரிசீலனையில், இந்த கடிதத்திற்குள் உங்கள் சொந்தப் பகுதியில் உள்ள பரிசுத்தவான்களுக்காக வெளிப்படையாக எழுதப்பட்ட ஒரு செய்தி இருக்கிறது…
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.