VIEWS

PageS
0

இஸ்ரயேல் அரேபியர்களின் சமாதான நடவடிக்கைகளும் தீர்க்கதரிசனங்களும்

சர்வ வல்லவரின் தெய்வீக திட்டம், மாபெரும் மகத்துவமானது. இஸ்ரயேல் ஜனத்தை தெரிந்து கொண்டு, வழிநடத்தி, அவர்களுக்கு ஒரு தேசத்தையும் கொடுத்து, பிற்காலங்களில் இந்த தேசத்தில் இல்லாத படி சிதறடித்து, மீண்டும் கூட்டி சேர்த்தல் என்னும் தேவனின் தொலைநோக்கு பார்வையும், தன் ஜனத்தை வழிநடத்தும் விதமும் அற்புதமானது. அத்துடன் இந்த தேசத்தாருக்கு நேரிடும் வாதைகளும், துன்பங்களும், ஆசிர்வாதங்களும், தீர்க்கதரிசனங்கள் வாயிலாக முன்னுரைத்து. அந்த தீர்க்கதரிசனங்களில் ஒன்றும் மாறாமலும், தமதிக்காமலும் நடைமுறை படுத்தும் தேவனின் வல்லமையும், அதன் மகத்துவமும் அளவற்றது.
இஸ்ரயேலர்கள் வரலாற்றில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடங்கள், பிற்காலத்தில் புறஜாதி ஜனத்தால் பறிக்கப்பட்ட இடங்கள், தற்காலத்தில் இஸ்ரயேல் தேசத்தை சுற்றி உள்ள அரேபியர்களின் தந்திரமான, சமாதானம் என்ற போர்வையில் வரும் உடன்படிக்கைகள், ஏற்ற சூழலில் தேவன் வாக்குத்தத்தமாக கூறிய இடத்தை மூழுவதும் தரும் ஆசீர்வாதங்கள் இத்தகைய தீர்க்கதரிசன நிறைவேறுதல்களை எடுத்துக்கூறும் புத்தகமாக இந்த புத்தகம் அமையப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *