சர்வ வல்லவரின் ஞானத்தையும், வல்லமையும், அறிந்துகொள்ள சிறிய வாய்ப்பாக இஸ்ரேல் அதிசயங்களின் தேசம் என்ற, இந்த புத்தகம் பெரிதும் உதவுகிறது. பிள்ளை பெறாத மலடியை போல இருந்த, பாலான தேசம் இது. இந்த தேசம் போல வேறு எந்த தேசமும் அழிக்கப்பட்டது இல்லை. இந்த தேசத்தார்கள் போன்று வேறு எந்த தேசத்தார்களும் சிதறடிக்கப்பட்டது இல்லை. உலகில் பல இடங்களில் சிதறடிக்கப்பட்ட ஜனங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூட்டி சேர்த்து மீண்டும் ஒரு தேசமாக ஸ்தாபித்தல் என்பது மனிதனின் சிந்திக்கும், வல்லமை, அப்பாற்பட்டது.
ஆம் பிரியமானவர்களே இஸ்ரயேல் அதிசயங்களின் தேசமே. இந்த புத்தகத்தை வாசித்து தியானிக்கும் போது தேவனின் தீர்க்கதரிசன நிறைவேறுதல்களும், அவரின் குண லட்சண வெளிப்பாடும், இன்னும் மேலான அதிசயங்கள் யாவும் வெளியாகிறது. அவர் சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும். (சங்கீதம் 33: 9).