கர்த்தர் கற்பித்த ஜெபம்

ஜூன் 2024

ஒருவேளை…
• பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்காதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “பரமண்டலங்களிலிருக்கிற” என்று…

• எனக்காக மட்டும் வாழ்பவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “எங்கள்” என்று…

• பிதாவின் பிள்ளையெனச் செயல்பட ஒவ்வொரு நாளும் பிரயாசங்கள் எடுத்துக்கொள்ளாதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “பிதாவே” என்று…

• பரிசுத்தமாய் ஜீவிப்பதற்கு நாடாதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று…

• இராஜ்யம் வருவதற்காக என்னால் செய்யமுடிந்த காரியங்கள் அனைத்தையும் செய்யாதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “உம்முடைய இராஜ்யம் வருவதாக” என்று…

• அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று…
• இங்கு, இப்பொழுது அவருக்கு ஊழியம் செய்யாதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “பரமண்டலத்தில் செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று…

• வேறு ஆதாயங்களுக்காக/காரியங்களுக்காக வஞ்சகமாய் அல்லது தந்திரமாய் நாடுபவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று…

• ஒருவருக்கு விரோதமாக பகையை மனதில் வைத்துக்கொண்டிருப்பவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று…

• தீமையின் பாதையில் நானே போய் நின்றுகொண்டிருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் ” என்று…

• தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களை அணிந்துகொள்ளாதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று…

• உண்மையுள்ள குடிமகனென இராஜாவுக்குக் காண்பிக்கப் பாத்திரமான நேர்மையினை கொண்டிராதவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “இராஜ்யம் உம்முடையது” என்று…

• மனுஷன் என்ன செய்துவிடுவானோ என்று அஞ்சுபவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “வல்லமை உம்முடையது” என்று…
• எனக்காக மட்டும் மகிமையினை தேடிக்கொள்பவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “மகிமை உம்முடையது” என்று…

• எனது வாழ்க்கையினை, என் கால வரையறைக்குள் முழுவதும் அடக்கிக்கொள்பவனாக நான் இருப்பேனேயாகில், ஜெபிக்க இயலாதே எந்தனால்: “என்றென்றைக்கும் உம்முடையவைகளே” என்று….

– Devotions
Bible Student’s Library