நான் என்னைச் சுற்றி நோக்கிப்பார்க்கையில் எத்தனை மனுஷர்கள் என்னைப் போன்று அல்லது ஒருவேளை இன்னும் ஆழ்ந்த துயரங்களில்/பெரிய சங்கடங்களில் காணப்படுகின்றார்கள் என்றும், அடைக்கலமாய்த் தஞ்சம்புகுவதற்கு அவர்களுக்கு ஒரு தந்தை இல்லையே என்றும் பார்க்கின்றேன்.
நான் பின்னே திரும்பிப்பார்க்கையில்…. நான் வழிநடத்தப்பட்ட மொத்த பயணத்தையும், மேலும் நான் கண்டடைந்த அளவில்லா இரக்கத்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.
நான் முன்னே நோக்கிப்பார்க்கையில்… என் பரலோக வாழ்வு வாசலருகே இருப்பதைப் பார்க்கின்றேன். அங்கே எனது வழிகாட்டியாகிய இயேசுவும், எனது தேவனும் இருக்கின்றார்கள்; விரைவில் நானும் அங்கே போய் சேர்ந்திடுவேன்.
இப்படி நான் சுற்றியும், பின்னேயும், முன்னேயும் நோக்கிப்பார்த்து சிந்தித்த பிற்பாடு, எனது துன்பத்தை அதன் முக்கியத்துவம் மற்றும் உட்பொருளை உணர்ந்துபார்க்கும் நேரத்திற்குள்ளாக, என் துயரங்களின் வேதனை யாவும் முற்றிலும் மறைந்துவிடுகின்றன.
– BIBLE STUDENT ARCHIVES