சீர்ப்படுத்துதல்

நவம்பர் - 2026

சீர்ப்படுத்துதல் / Discipline என்பது பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட / பக்குவப்படுத்தப்பட்ட / நெறிப்படுத்தப்பட்ட சிந்தனைகள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உணர்ச்சிகள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பழக்கவழக்கங்கள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சம்பாஷணைகள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வேத ஆராய்ச்சிகள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட செயல்பாடுகள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஐக்கியம், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஜெபங்கள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட கோபதாபங்கள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நியாயத்தீர்ப்புகள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சத்தியப் புரிதல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது.

சீர்ப்படுத்துதல் இல்லாமல்போனால் அங்கே சிறிய அளவிலான மாற்றம்கூட அல்லது முன்னேற்றம்கூட இருக்காது. நாம் கொண்டுள்ள மென்மையான மற்றும் வளைந்துகொடுக்கக்கூடிய குணங்களை, தமது குமாரனுடைய சாயலாக வனைய தேவன் விரும்புகின்றார். சீர்ப்படுத்துதல் இல்லையென்றால், இந்தக் குணங்கள் கடினப்பட்டு, உருமாறி விகாரமடைந்துவிடும். நாம் சீர்ப்படுத்தப்படாமல்போனால், விரைவில் இந்தக் குணங்கள் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்ற பரலோக மாதிரியின் சாயலை வெளிப்படுத்தாமல், பழைய மனுஷனின் சாயலையே தரித்துநிற்கும். இந்தச் சீர்ப்படுத்துதல் எனும் பயிற்றுவிப்புக்கு அடிபணிய நாம் எந்தளவுக்குத் தயங்கித் தாமதிக்கின்றோமோ, அந்தளவுக்குக் கிறிஸ்துவினுடைய சாயலுக்கு நாம் இசைந்து உருப்பெறும் காரியமும் கடினமாகிவிடும்.

“மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” – ரோமர் 8:13

புதிய சுபாவத்திற்குரிய நற்குணத்தின் மேன்மைத்தன்மையானது, தெய்வீகச் சீர்ப்படுத்துதலுக்கும், சுயக்கட்டுப்பாட்டிற்கும் நாம் வெளிப்படுத்துகின்ற முழு ஈடுபாட்டின் அளவிற்கு ஏற்பவே காணப்படுகின்றது.

– Bible Student’s Library