தெய்வீக உதவி

மார்ச் - 2026

தேவை எழும்புவதற்கு முன்னதாகவே, கிருபை / தெய்வீக உதவி முன்கூட்டியே கிடைத்துவிடும் என்ற வாக்குறுதி எதுவும் அளிக்கப்படவில்லை.

உதாரணத்திற்கு:- இஸ்ரயேல் ஜனங்கள் கடற்கரை விளிம்பை அடைவதற்கு முன்னதாகவே, தேவன் செங்கடலில் வழியை முன்கூட்டியே உருவாக்கி வைத்துவைக்கவில்லை. ஜனங்கள் தங்கள் கூடாரத்தில் தங்கி இருந்தபோதோ அல்லது அவர்கள் பயணத்தைத் தொடங்கிய முதற்கணத்திலோகூட, அவர் யோர்தான் நதியின் தண்ணீரை முன்கூட்டியே பிரித்து வைக்கவில்லை. இஸ்ரயேலர் எகிப்தில் வசித்து வந்தபோது, அவர் வனாந்தரத்தில் மன்னாவை முன்கூட்டியே சேகரித்து வைக்கவில்லை. சீரியர்கள் எருசலேமின் வாசல்களுக்கு வந்த பின்னரே, அவர் தமது தூதரை அனுப்பினார்.

அவர்கள் தங்கள் தேவையின் விளிம்பிற்கு வந்து நின்றபோதுதான், வழங்கப்பட வேண்டிய உதவி கடந்துவந்தது -அது ஒரு கணம்கூட முந்தி வரவில்லை!

தேவை வரும் அதே கணத்தில்தான், உதவும் கிருபையும் வந்து சேருகின்றது!

தேவையும், உதவும் கிருபையும் ஒருமித்து நிகழ்கின்றன!!

– BIBLE STUDENT ARCHIVES