தேவனுடைய கரங்கள்

அக்டோபர் - 2025

நம்முடைய வாழ்க்கை, கடிகாரத்தினுடைய எண் முகப்பு / dial போன்றிருக்கின்றது. கடிகாரத்தில் சுழலும் முட்கள் / hands, தேவனுடைய கரங்கள் போன்றிருக்கின்றது. அதன் முட்கள் மீண்டும் மீண்டும் கடிகாரத்தின் முகப்பில் சுழல்கின்றன. அதன் சின்ன முள் / Short Hand, சீர்த்திருத்தத்திற்கு ஏதுவான பயிற்சி அளிக்கும் தேவனுடைய கரம் போன்றும், அதன் நீள முள் / Long Hand இரக்கம் பாராட்டும் தேவனுடைய கரம் போன்றும் காணப்படுகின்றன.
சீர்த்திருத்தத்திற்கு ஏதுவான பயிற்சி அளிக்கும் கரமானது, மெதுவாகவும் உறுதியாகவும் நகர்ந்து செல்கின்றது; மேலும் அதன் ஒவ்வொரு அசைவிலும் தேவனுடைய குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்; அதேசமயம் இந்தப் பயிற்சி/சிட்சை மற்றும் சோதனை எனும் தேவனுடைய கரத்தின் ஒவ்வொரு அசைவின்போதும், அதே முகப்பில் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் தேவனுடைய இரக்கத்தின் கரம் அறுபது மடங்கு ஆசீர்வாதங்களைப் பொழிகின்றது. கடிகாரத்தில் இந்த இரண்டு கரங்களுமே ஒரே உறுதியான மையப்புள்ளியில் பிணைக்கப்பட்டுள்ளது; அந்த உறுதியான புள்ளி தேவனுடைய இருதயத்தை அடையாளப்படுத்துகின்றது.

– Bible Student’s Library (1951)