(ஊழியக்காரனாகிய) நான் ரயிலைப் பிடிக்க அவசரமாகப் போய்க் கொண்டிருந்தேன்; ஆனால் அன்று காலை நான் கற்றுக்கொண்ட பாடமானது, மறக்க முடியாத ஒன்றாகும்.
அவள் ஒரு சின்னஞ்சிறு பிள்ளை. அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை, பனிக்கட்டியான நடைபாதையில், தன்னுடைய சின்னஞ்சிறு கால்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமாக தட்டுத்தடுமாறி நடந்து போய்க்கொண்டிருந்தாள்; இப்படி அவள் நடந்து கொண்டிருந்தபோது, அவள் வழுக்கி கீழே விழுந்துவிட்டாள். அவள் எழுந்துநின்று, மீண்டும் தட்டுத்தடுமாறி நடந்தாள்; மீண்டும் வழுக்கி கீழே விழுந்துவிட்டாள். அவள் இப்படி விழுந்து, இரண்டாம் விசை எழும்பும்போது, உதவும்படிக்கு நான் அவள் அருகில் சென்றேன். அவள் தனது அழகிய நீலநிற கண்களினால் என்னைப் பார்த்து: “நான் விழுந்துவிட்டேன்; கொஞ்சம் வலிக்கின்றது; இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணப்போகின்றேன்” என்றாள்.
என்னை உற்சாகமூட்டின சிறு பிள்ளையே! உனக்கு எனது நன்றிகள்! ஏனெனில் முந்தின நாள் இரவில், நான் சில விஷயங்களில் தோல்வியை அடைந்திருந்தேன்; எனது ஆசைகள் அனைத்தும் சின்னாபின்னமாகப் போய்விட்டது; நான் மிகவும் விரும்பின விஷயங்களுக்கு, எல்லாப் பக்கங்களிலிருந்தும் எனக்கு எதிர்ப்புகள் வந்திருந்தது. “இன்னும்கூடக் கொஞ்சம் முயன்று பார்க்கலாமே” என்ற எண்ணம் எனக்கு வரவேயில்லை.
ஆனால் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளையின் வார்த்தைகள் என் இருதயத்தைத் தொட்டது. எதிர்ப்புகள் மற்றும் தோல்விகளினால் என் மனதிற்குக் கொஞ்சம் வலி ஏற்பட்டது உண்மைத்தான். எனினும், கொஞ்சம்கூட முயன்றால் நலமாயிருக்கும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. பின்னர் நானும் முயன்றுபார்த்தேன்; எதிர்பார்த்த பலனும் கிடைத்தது.
அதுமுதற்கொண்டு, அச்சிறு பிள்ளையினுடைய வார்த்தைகள் அடிக்கடி எனது ஞாபகத்திற்கு வந்துபோகும்.
“நான் விழுந்துவிட்டேன்..
எனக்குக் கொஞ்சம் வலிக்கின்றது …
இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணப்போகின்றேன்”
– இதுவே கிறிஸ்தவ ஊழியத்தின் அனுபவமாகும்.
– Devotions
Bible Student’s Library