குறைந்த காற்றழுத்தப் பகுதியை நோக்கின பயணம்

மார்ச் - 2025

திரு. Handley Page எனும் விமானியால் பகிரப்பட்ட சம்பவம் ஒன்றை திரு. Frank அவர்கள் பதிவு செய்துள்ளார். திரு. Handley அவர்கள் அரேபியாவிலுள்ள கோபார் என்ற இடத்தில் விமானத்தைத் தரையிறக்கியபோது, பெரிய எலி ஒன்று அவரது விமானத்திற்குள் நுழைந்துவிட்டது. திரு. Handley அவர்கள் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, தனக்குப் பின்னால் கறகறவென்று கேட்ட பற்கடிப்புச் சத்தத்தை வைத்து, எலி விமானத்திற்குள் இருப்பதை அறிந்துகொண்டார். அந்த இரக்கமற்ற பற்கள் செய்யக்கூடிய சேதத்தை எண்ணி பயந்த விமானி, எலியினால் அதிக உயரத்தில் (உள்ள குறைந்த காற்றழுத்தத்தில்) உயிர்வாழ முடியாது என்பதை நினைவுகூர்ந்தார். அவர் விமானத்தை உயர பறக்க முடிவுசெய்து, எலிக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் வரை உயரத்திற்குப் பறந்துகொண்டே இருந்தார். இறுதியில், கீழே இறங்கியதும், எலி இறந்து போயிருப்பதைக் கண்டார்.
சோதனைகளை எதிர்கொள்ளும் நமக்கு இங்கே ஒரு படிப்பினை இருக்கின்றது. நம் ஆத்துமாவைத் தொந்தரவு செய்யும் தீய எண்ணங்கள் நிமித்தம் நாம் ஆபத்தில் இருப்பதாக உணரும்போது, அவைகளினின்று விடுபட (அவைகளை வெல்ல) நாம் கிறிஸ்தவ வளர்ச்சியின் விஷயத்தில் உயர்நிலையை அடைய கவனம் செலுத்துவது மட்டுமே போதுமானது ஆகும்.

– Devotions
Bible Student’s Library