ஏப்ரல் - 2024

கீழ்ப்படிதல்

இன்றைய தினம் என்பது ஒரு மெல்லிய பாலம் போன்றது; அதற்கு அதன் சுமையை மட்டுமே சுமக்கமுடியும்: அதன்மேல் நாளைய தினத்தின் சுமையைக் கூட்டுவோமானால், அது உடைந்துபோய்விடும். ஒவ்வொரு வருடமும் முந்நூற்று அறுபத்து ஐந்து கடிதங்கள் இராஜாவிடமிருந்து நமக்கு வருகின்றன. அவை ஒவ்வொன்றும், “எனக்காக இதைச் சகித்துக்கொள்” என்ற செய்தி எழுதப்பட்ட கடிதங்களாகக் காணப்படுகின்றன. இந்தக் கடிதங்களை நாம் என்னசெய்வது? ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குரிய கடிதத்தைப் பிரித்துப் படியுங்கள். நேற்றைய தினத்தினுடைய கடிதத்தின் முத்திரை உடைத்தாயிற்று; அதைப் பணிவாய் அப்பால் வைத்துவிடுங்கள். நேற்றைய தினத்தின் சிலுவை கீழே இறக்கி வைத்தாயிற்று, அதை மீண்டும் சுமக்க வேண்டியதில்லை. நாளைய தினத்திற்கான கடிதம் மேஜையில் காணப்படுகின்றது; அதன் முத்திரையை இன்றே உடைத்துத் திறக்கவேண்டாம். சில சமயங்களில், நாளைய சிலுவை இன்றைக்குரிய சிலுவையாக மாறும்போது, கண்களுக்குப் புலப்படாதவராக அவர் நம் அருகில் வந்து நின்று, தம் கரங்களை நம் கரங்கள்மீது வைத்து, நம்மைக் கருத்தூன்றிப்பார்த்து, அன்புகலந்த புன்னகையோடு அவர், “உன் நாட்களுக்குத் தக்கதாய் உன் பெலனும் இருக்கும்” என்று கூறுவார்.
வாழ்க்கையின் இலக்கணம் / பொருள் பின்வருமாறு: “கடந்தகாலத்தை நன்றியுணர்வோடு நினை; நிகழ்காலத்தைச் சேவையினால் நிறை; எதிர்காலத்தை நம்பிக்கையினால் தொடர் …”

வாழ்க்கையின் இலக்கணம்/பொருள் பின்வருமாறு: “கடந்தகாலத்தை நன்றியுணர்வோடு நினை; நிகழ்காலத்தைச் சேவையினால் நிறை; எதிர்காலத்தை நம்பிக்கையினால் தொடர் …”

– 1911 Convention Report,
BIBLE STUDENT ARCHIVES.