சில வகையான கிறிஸ்தவர்கள்

ஜூலை - 2025

  • முதலாவதாக, “சோர்வான கிறிஸ்தவர்கள்(Tired Christians) என்கிற சிலர் இருக்கின்றார்கள். இம்மாதிரியான ஒரு நபரை ஒருவேளை உற்சாகமூட்டினால், இவர் வேலை செய்வார். ஆனாலும் ஓயாமல் புலம்பிக்கொண்டே வேலைகளைச் செய்பவராகக் காணப்படுவார். ஆதலால், அந்த வேலையைச் செய்பவர்களுக்கும் சரி, அதை பார்ப்பவர்களுக்கும் சரி, ஒருவித சலிப்புதான் மிஞ்சும்.
  • இரண்டாவதாக, “ஓய்வுபெற்ற கிறிஸ்தவர்கள்(Retired Christians) என்கிற சிலர் இருக்கின்றார்கள். இம்மாதிரியான ஒரு நபர் தனது பங்கைச் செய்து முடித்துவிட்டதாக நினைத்து, வெறுமனே உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களைக் குறைசொல்லுவதை/ விமர்சனம் செய்வதைத் தொழிலாகக் கொண்டிருப்பார்.
  • மூன்றாவதாக, “சௌகரியமான கிறிஸ்தவர்கள் / ரப்பர் டயர் போன்ற கிறிஸ்தவர்கள்” (Rubber-Tyred Christians) என்கிற சிலர் இருக்கின்றார்கள். இம்மாதிரியான ஒரு நபர் பாதை தெளிவாகவும், சாலை சீராகவும் இருந்தால் மட்டும் செயல்படுபவராக இருப்பார்; அதாவது எச்சிரமமும் இல்லாமல் இருந்தால் மட்டும் செயல்படுபவராக இருப்பார் பிரச்சனை வந்தால் ஒதுங்கிவிடுவார்.
  • இறுதியாக, “பின்னடைவை அடைந்த கிறிஸ்தவர்கள் / பஞ்சரான டயர் போன்ற கிறிஸ்தவர்கள்” (Flat-Tyred Christians) என்கிற சிலர் இருக்கின்றார்கள். இம்மாதிரியான ஒரு நபர் ஒருகாலத்தில் ஊழியத்திற்கடுத்த காரியங்களில் சுறுசுறுப்பாகவும், உண்மையாகவும், காணப்பட்டிருந்திருப்பார்; ஆனால் இவர் ஒருகட்டத்தில் பின்னடைவை அடைந்திருப்பார்; பிற்பாடு இவர் அதிலிருந்து மீண்டு வராதவர் ஆவார்.
  • நாம் இப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவரா?

– Bible Student’s Monthly