நில்லுங்கள்

செப்டம்பர் - 2025

உங்களால் எதுவும் செய்ய முடியாதபோது, உறுதியாக மட்டும் நில்லுங்கள்.

“சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நில்லுங்கள்.”

ஆனால் எப்படி மற்றும் எங்கு நிற்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

“விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்.”

உங்களது உடன்படிக்கையின் அடிப்படையில் நில்லுங்கள்.

எதிரியை எதிர்த்து நில்லுங்கள்.

கவனித்து நில்லுங்கள், காத்திருங்கள்… வெற்றி கொள்ளுங்கள்.

“அசையாமல் நின்று கர்த்தருடைய இரட்சிப்பைப் பாருங்கள்.”

உங்கள் சொந்த இஷ்டப்படியோ அல்லது மனித கட்டளைப்படியோ நிற்காதீர்கள்.

செங்கடல் போன்ற தடைகள் உங்கள் வழியில் காணப்பட்டாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் நீங்கள் முன்னேறுவது தேவனுடைய சித்தமாக இருக்கலாம்…

நிற்பதைவிட அணிவகுத்துச் செல்வது எளிதுதான்; அசையாமல் நின்று கடுமையாகத் தாக்கப்படுவதைவிட, விரைந்து பாய்ந்து தாக்குவது எளிதுதான்; எனினும் ஒரு நல்ல வீரன் மேற்கூறிய இரண்டிற்கும் தயாராக இருக்க வேண்டும்.

தங்கள் இராஜாவுக்காக அணிவகுத்துச்சென்று போரிடுபவர்கள்… அவருக்குச் சேவை செய்பவர்களாக கருதப்படுவார்கள்; அதேசமயம் “நின்றுகொண்டு காத்திருப்பவர்களும்கூடச் சேவை செய்கிறவர்களாகவே கருதப்படுவார்கள்.”

பொறுமையும், மனஉறுதியும் தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தவை, மேலும் “பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலே சிறந்தது.”

பொறுமை அதன் பூரண கிரியையைச் செய்யவேண்டிய தருணங்களின்போது, அதாவது நெருக்கடியும் சிரமமும் உள்ள போராட்டத்தின்போது அல்லது காத்திருக்கும் சோதனையின்போது, அங்கே நாம் பொறுமையாக நிலைத்திருப்பதே மிகவும் சிறந்ததாக இருக்கும்.”