தண்ணீரில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த தேள் ஒன்றினை, ஒரு மனுஷன் கண்டான். அம்மனுஷன் அதைக் காப்பாற்றலாம் என எண்ணி, தன் கையை நீட்டி அதைப் பிடிக்க முயன்றபோதோ, அந்தத் தேள் அவனைக் கொட்டியது. எனினும் அதைத் தண்ணீரினின்று காப்பாற்றும்படிக்கு அம்மனுஷன் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தான்; தேளும் அவனை மீண்டும் மீண்டுமாகக் கொட்டிக்கொண்டே இருந்தது.
அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், திரும்பத்திரும்பக் கொட்டிக்கொண்டிருக்கும் தேளைக் காப்பாற்றாதே, நிறுத்து என்று அம்மனுஷனிடம் கூறினார். அதற்கு அந்த மனுஷனோ: “கொட்டுவது என்பது தேளினுடைய சுபாவம்; அன்புகாட்டுவது என்பது என்னுடைய சுபாவம். கொட்டுவது தேளினுடைய சுபாவமாகக் காணப்படுகின்றது என்பதற்காக, நான் ஏன் எனது சுபாவத்தைக் கைவிட வேண்டும்?” என்று வினவினான்.
ஒருவேளை சுற்றியிருப்பவர்கள் உங்களைக் காயப்படுத்தினாலும். . .
அன்புபாராட்டுவதை நிறுத்திக்கொள்ளாதிருங்கள். . .
உங்கள் நற்குணங்களைக் கைவிடாதிருங்கள்!
அன்புபாராட்டுவதைக் கைவிட வேண்டாம். உங்கள் இருதயத்தில் அன்பைப் பெற்றிருப்பீர்களானால், கொடுப்பதற்கென்று நீங்கள் எதையேனும், எப்போதும் பெற்றவர்களாகவே இருப்பீர்கள். அன்பை நீங்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டாலும், இந்த அன்பு எனும் ஒரே பொக்கிஷமே குறைந்துபோகாமல், பெருகுகின்றதாய் இருக்கும். அன்பை நீங்கள் அள்ளி கொடுக்கக்கொடுக்க, இந்த அன்பென்னும், ஒரே பண்பே பெரிதாக வளருகின்றதாய் இருக்கும். அன்பென்னும் இந்த ஒரே வியாபாரத்தில்தான், அன்பை நீங்கள் ஊதாரித்தனமாகச் செலவு செய்யலாம். நீங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்ளலாம் . . . அதை அள்ளி அள்ளி வீசலாம் . . . அதை முற்றிலுமாகக் கொடுத்துவிடலாம் . . . அதை அமுக்கிக் குலுக்கிக் கொடுத்துவிடலாம் . . . அதை வாரி இறைத்திடலாம் . . . ஆனால் அது ஒருபோதும் தீர்ந்துபோகாது; மாறாக மேலும் மேலும் பெருகிக்கொண்டேயிருக்கும்.
– Devotions
Bible Student’s Library