பெலன்

“பெலன்” என்னும் சொல் “முறுக்கிப் பின்னி பிணைக்கப்பட்ட” என்று பொருள் தரும் வார்த்தையிலிருந்து வருகின்றது.

“கர்த்தரே என் ஜீவனின் பெலன்,” “தேவனே என் ஆத்துமாவின் பெலன்” என்று சொல்லும்போது… அது எனது வாழ்வு கர்த்தருடன் சேர்த்துப் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது. ஆகையால் தேவனும், (எனது ஆத்துமாவும்) நானும் இரண்டு இழைகள்போன்று ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று புரிந்துகொள்ளலாம்.

ஒருவருக்கு இல்லாவிட்டாலும், உண்மையில் பலம் ஏதும் முடிவில்லாத சர்வவல்லவர் ஒருவருடன் பிணைந்திருக்கும்போது, மிகவும் பலவீனமானவர்கூடத் தளர்ந்துபோகமாட்டார்/ தோற்கமாட்டார்.

ஆகையால், நாம் எவ்வளவு நம்பிக்கையுடன், “கர்த்தரே என் இரட்சிப்பின் பெலன்” என்று சொல்ல முடியும்!

– BIBLE STUDENT ARCHIVES