பலியின் மரணமா அல்லது உண்மையான மரணமா?

15 ஜூலை 2024

பலியின் மரணமா அல்லது உண்மையான மரணமா?

Q221:1

கேள்வி (1916) – 1 சங்கீதம் 116:15 – “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது .” இவ்வசனத்தில், தினந்தோறும் பரிசுத்தவான் அனுபவிக்கும் பலியின் மரணம்குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா அல்லது பரிசுத்தவானுடைய உண்மையான மரணம்குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா?

பதில் : இவ்வசனத்தின் விஷயத்தில் நாம் வாக்குவாதம் செய்ய வேண்டியதேயில்லை. பரிசுத்தவான் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே தேவனுக்கு விலையேறப்பெற்றவையாகக் காணப்படுகின்றது. பரிசுத்தவான் தன்னை அர்ப்பணம்பண்ணும் தருணமானது, தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றதாகக் காணப்படுகின்றது. முதல் பரிசுத்தவானாகிய இயேசு தம்மை அர்ப்பணம்பண்ணினபோது, அது தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றதாய்க் காணப்பட்டது; அத்தருணத்தில் இயேசுவின்மீது பரிசுத்த ஆவியினை பிதா இறங்கிவரப்பண்ணி, அவர் தேவனுடைய குமாரன் என்று அறிக்கை பண்ணினார். நாம் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்கூடத் திவ்விய தயவும், ஆசீர்வாதமும் நமக்குக் காணப்படும்; ஏனெனில் பரிசுத்தவான் சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களுமே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவையாகக் காணப்படுகின்றது. அர்ப்பணிப்பும், இப்படி அன்றாடம் மரித்தலும், இன்னுமாக இறுதியில் உண்மையாக மரித்தலுமாகிய இவைகள் அனைத்துமே பிதாவுக்கு விலையேறப்பெற்றவையாகக் காணப்படுகின்றன. இப்படிச் செய்பவர்கள் அனைவருக்கும், அவர் மகா பலனை அருளவிருக்கின்றார்; ஆகையால் இத்தகையவர்கள் அவர் பார்வையில் விலையேறப்பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

– பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்