ஜெபத்தின் வல்லமை

ஜூலை - 2024

பறவையானது மரக்கிளையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில், அது கீழே விழுவதில்லை! இதை நீங்களும் கவனித்திருப்பீர்களல்லவா? பறவையினால் எப்படிக் கீழே விழாமல் இப்படிக் காணப்பட முடிகின்றது?

பறவையின் கால்களில் காணப்படும் தசைநார்களிலேயே இரகசியம் காணப்படுகின்றது. பறவைகள் அதன் முழங்கால்களை மடக்கும்போது, அதன் நகங்கள் இரும்பு கொக்கிபோல் கிளையினை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் வகையில், அதன் தசைநார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன; மேலும் பறவையானது அதன் முழங்கால்களை நீட்டி நிமிர்த்தும் வரை, இந்த நகங்கள் அதன் இறுக்கமான பிடியினைத் தளர்த்துவதில்லை. வளைந்து மடிந்திருக்கும் முழங்கால்களே, கிளையினை மிகவும் இறுக்கமாகப் பற்றிப்பிடித்திருக்கும் திறனை பறவைக்குக் கொடுக்கின்றதாக இருக்கின்றது.

நமக்கு மிகவும் விலையேறப்பெற்றவைகளாகக் காணப்படும் நேர்மை, பரிசுத்தம், விவேகம், கண்ணியம், நற்பண்புகள் போன்றவைகளை எப்படி உறுதியாகக் கடைபிடித்து காத்துக்கொள்வது என்பதைத் தூங்கும் பறவை யிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கைதனை அர்த்தமுள்ளதாக்கும் இந்த விலையேறப்பெற்ற பண்புகளை உறுதியாய்க் கடைபிடிப்பதற்கு, முழங்கால் மடக்கி ஜெபம்பண்ணுவதே அந்த இரகசியமாகக் காணப்படுகின்றது. ஜெபத்தில் தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோமேயானால், அவர் நம்மைக் கைவிடாமல் காப்பாற்றுவார் என்று நாம் நிச்சயம்கொள்ளலாம்.

“கர்த்தரையும், அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.” (சங்கீதம் 105:4)

– The Herald Magazine, 2003