முதிர்ச்சியடைந்துள்ள குணலட்சணத்தினை தனித்துவமாகக் காட்டும் அடையாளங்கள் என்னென்ன?
“அழகு” என்பது, கனிந்த பழத்திற்குரிய முதல் அடையாளமாகும். கனிந்த பழமானது, அதற்கேயுரிய அழகினைப் பெற்றிருக்கும். பழமானது கனியக்கனிய, சூரியன் அதற்கு அழகிய வண்ணங்களை அளித்து, அதன் நிறங்களை ஆழமாக்குகின்றது; இதனால் பழத்தின் அழகு, பூவின் அழகிற்குச் சமமாகின்றது; மேலும் சில அம்சங்களில் பூவைவிட மிஞ்சியும் காணப்படுகின்றது. கனிந்த / முதிர்ச்சியடைந்துள்ள கிறிஸ்தவனிடத்தில் பரிசுத்தமாகுதலின் அழகினைக் காணலாம்; இதை தேவனுடைய வார்த்தைகள் “பரிசுத்த அலங்காரம்” என்று குறிப்பிடுகின்றது.
“மென்மை” என்பது, கனிந்த பழத்திற்குரிய மற்றுமொரு அடையாளமாகும். பிஞ்சு பச்சை காயானது, கடினமாகவும், கல் போன்றும் காணப்படும். முதிர்ந்த கிறிஸ்தவன் மென்மையான ஆவியினை உடையவனாக அறியப்பட்டிருப்பான்.
“தித்திப்பு” என்பது, கனிந்த பழத்திற்குரிய மற்றுமொரு அடையாளமாகும். கனிந்திராத பழம் புளிப்பு சுவை உடையதாகக் காணப்படும். ஆவியின் கனிகள் வளரும்போது, நாம் அனுதாபத்திலும், அன்பிலும்கூட நிச்சயமாக வளருவோம்; மேலும் நமது ஆவிக்குரிய கனிகள் கனியும்போது, நம்முடைய சக கிறிஸ்தவர்களிடம் நாம் அதிக இனிமையுடன் பழகுகின்றவர்களாக இருப்போம். கசப்பான ஆவியை உடைய கிறிஸ்தவர்கள் அநேக காரியங்களைப் பற்றிய அறிவை உடையவர்களாக ஒருவேளை காணப்படலாம்…இவர்கள் கண்டனம் செய்வதில் விரைவானவர்கள் என்பதால், தீர்ப்பு வழங்குவதிலும் மிகவும் கூர்மையாக ஒருவேளை இருக்கலாம் ஆனாலும் இவர்கள் இருதயத்தில் இன்னும் முதிர்ச்சியடையாதவர்களே ஆவார்கள்.
“தளர்வான பிடி” என்பது, கனிந்த பழத்திற்குரிய மிகவும் தெளிவான மற்றுமொரு அடையாளமாகும். கனிந்த பழமானது தண்டிலிருந்து எளிதாகப் பிரிக்கப்படலாம். இது (முதிர்ந்த கிறிஸ்தவன் கொண்டிருக்கும்) உலகத்தின் மீதான தளர்வான பற்றுதலை / பிடிப்பைச் சுட்டிக்காட்டுகின்றது.
– Bible Student’s Library