விசுவாசம் எப்பொழுதுமே பகுத்தறிவுடன் இயங்குகின்றது. விசுவாசமானது தேவனை நோக்கிப்பார்த்துவிட்டு, பிறகு பிரச்சனையைக்குறித்துச் சிந்திக்கும் விதமாகப் பயணிக்கின்றது; அதாவது தேவனை மையமாகக்கொண்டு, வாழ்க்கையின் பிரச்சனைகளை அணுகுகின்றது. மாறாக விசுவாசமின்மையோ பிரச்சனைகளை முதலாவது நோக்கிப்பார்த்துவிட்டு, பின்னர் தேவனை அணுகுகின்றது; அதாவது பிரச்சனைகளை மையமாகக்கொண்டு, தேவனை அணுகுகின்றது. இதுவே விசுவாசத்திற்கும், விசுவாசமின்மைக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகக் காணப்படுகின்றது. பிரச்சனைகள் வரும்போது, நாம் அதைக் கண்டுகொள்ளாமல், அலட்சியமாகக்/மரத்துப்போனவர்களாகக் காணப்பட வேண்டும் என்பதாகச் சொல்லப்படவில்லை; ஆனாலும் அதற்கென்று பிரச்சனைகள் வரும்போது நாம் அதி துணிச்சலுடன் காணப்படவும்கூடாது. மரத்துப்போன நிலைமையோ / கண்டுகொள்ளாமல் காணப்படும் நிலைமையோ, அதி துணிச்சலோ விசுவாசமாய் இராது. பிரச்சனைகளின் சவால்களை விசுவாசமானது, கண்களைத் திறந்து துணிவுடன் எதிர்கொள்ளும்; இன்னுமாக பிரச்சனைகளின் கடுமையினை விசுவாசமானது முழுமையாக உணர்ந்து, பின்வாங்காமல் துணிந்து நிற்கும். விசுவாசமானது, பிரச்சனைகளைக்குறித்துக் கண்டுகொள்ளாமல் இருப்பதில்லை, அலட்சியமாய் இருப்பதில்லை; அதி துணிச்சலுடனும் இருப்பதில்லை. மாறாக ஜீவனுள்ள தேவனை நம்முடைய நினைவுகளுக்குக் கொண்டுவருகின்றது! விசுவாசமானது அவரை நோக்கிப்பார்க்கின்றது; அவரைச் சார்ந்து நின்று அவரிடமிருந்து பெலனைப் பெற்றுக்கொள்கின்றது. இதுவே விசுவாசத்தினுடைய வலிமைக்கான பிரம்மாண்டமான இரகசியமாகும். எந்த ஒரு சுவரும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன் உயரமானதல்ல என்றும், எந்த ஒரு நகரமும் அவருக்கு முன் பெரியதல்ல என்றும், எந்த ஓர் இராட்சதனும் அவருக்கு முன் வலிமையானவனல்ல என்றுமுள்ள இளைப்பாறுதலான மற்றும் ஆழமான நம்பிக்கைதனை/உறுதிப்பாட்டினை விசுவாசமானது கொண்டிருக்கின்றது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் விசுவாசம் மட்டுமே, தேவனுக்குரிய தகுதியான ஸ்தானத்தினை அவருக்கு நம் மனங்களில் அளிக்கின்றது; இதன் விளைவாக விசுவாசமே, நம்மைச் சுற்றியுள்ள எந்த ஒரு சூழ்நிலைகளின் தாக்கத்திற்கும் அப்பால் பார்ப்பதற்கு நம் ஆத்துமாவை உயர்த்துகின்றதாய் இருக்கின்றது. காலேப்: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்” என்று கூறினபோது, இவர் இந்த விலையேறப்பெற்ற விசுவாசத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் (எண்ணாகமம் 13:30). இவ்வார்த்தைகள், தேவனை மகிமைப்படுத்துகின்றதும், சூழ்நிலைகளைக்குறித்துக் கவலைப்படாததுமான ஜீவனுள்ள விசுவாசத்தினுடைய உண்மையான தொனியாக விளங்குகின்றன!
– The Herald Magazine, 1984