அறிவு இல்லாமல், சரியான விசுவாசத்தில் நாம் வளர முடியாது. .தன்னுடைய சொந்த பலவீனத்தினால், அடைந்த வீழ்ச்சியும், பாவநிலையும், கைவிடப்பட்ட சூழ்நிலையைப் பற்றிய அறிவையும் பெறுவது, மனிதனுக்கு அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் தேவன் அவனுக்காக ஏற்படுத்தின திட்டத்தில் ஓர் இரட்சகர் அவனுக்காக கொடுக்கப்பட்டார் என்பதின் மதிப்பை அவனால் புரிந்துக்கொள்ளமுடியும்.
இப்புத்தகத்தை தியானிப்பதின் மூலம் அறிவின் முக்கியத்துவம், அதை பெறக்கூடிய வழிகள் மற்றும் இரட்சிப்படைய அறிவு தேவையா…. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது…. போன்ற மேலும் அனேக கேள்விகளுக்கான பதிலை புரிந்துகொள்ளலாம்.