இப்பொழுதும் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, பலதரப்பட்ட சவாலான சந்தர்ப்பங்களை எதிர்க்கொள்வதற்கும், “பரத்திலிருந்து வரும் ஞானத்தை” பெருக்கிக்கொள்வதற்கு வேண்டி திருமணமானவர்களாக அல்லது திருமணமாகாதவர்களாக…… கணவனாக அல்லது மனைவியாக……தகப்பனாக அல்லது தாயாக…… பருவ வயது பிள்ளையாக அல்லது வாலிபர்களாக…… நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு; ஏற்ப சரியான ஆலோசனையைப் பெற்றுகொள்வதற்கு அதிக ஜாக்கிரதையான ஆராய்ச்சிகள் நமக்கு அவசியமாய் இருக்கின்றது.(யாக்கோபு 3:17) ஆகையால் இந்த ஆராய்ச்சிக்கு, தங்களுக்கு உதவியாக இருக்கும்படிக்கு இந்தப் புத்தகத்தை விசேஷமாய்த் தொகுத்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தில், இப்பாடப் பொருள் சம்பந்தமாகச் சகோ. ரசல் அவர்கள் எழுதியுள்ள விஷயங்களை ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகளிலிருந்தும், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்களிலிருந்தும், அவரது வேறு சில கட்டுரைகளிலிருந்தும் பிரித்தெடுத்து, தொகுத்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.