இப்புத்தகமானது, ஏன் முற்பிதாவாகிய தாவீது, தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற மனுஷன் என்று அழைக்கப்பட்டார் என்பதற்கான காரணங்களை தாவீதின் வாழ்வியல் பாடங்களிலிந்து படம் பிடித்து காட்டுகின்றது. தாவீதின் இளமை முதல், முதுமை வரையிலும், அவர் வெளிப்படுத்தின ஒப்புயர்வற்ற பண்பும், அவர் சத்துருக்கள்பால் அவர் கொண்டிருந்த மனநிலையும், இரக்கமும், அவரது பல்வேறு வீழ்ச்சிகளும், அவர் அதநிமித்தம் அனுபவித்த தேவ சிட்சைகளும், அவர் தேவ சித்தம் நிறைவேற பொறுமையோடு காத்திருந்த காரியமும், இஸ்ரேல் ஜனங்களிடையே அவர் ஆற்றின ஊழியங்களும், கொண்டுவந்த மத மறுமலர்ச்சியும், அவரது விசுவாசமும், அவரது தாழ்மையும், அவரது பாவ அறிக்கையும், அவரது விழுகையும் எழுகையும், அவரது கீழ்ப்படிதலுமாகிய இவைகள் அனைத்தும்…….. புதுச்சிருஷ்டிகளாகிய நமக்கு மகா ஆழமான படிப்பினைகளை கற்று தந்து, நமது ஆவிக்கும் பாதைக்கும் வழிகாட்டுதலாக அமைகின்றன.
அதேசமயம் தேவன் பாவியையும், துணிகரமான பாவத்தையும் நியாயந்தீர்க்கும் விதத்தைக்குறித்தும் அவரது மன்னிக்கும் அன்பின் ஆழங்கள் குறித்துமான மிகப்பெரிய வெளிச்சத்தினை இப்புத்தகமானது நமக்கு வெளிப்படுத்துகின்றது.