ஒவ்வொரு கிறிஸ்தவனும் குறைந்தபட்சம் அறிந்துக்கொள்ளவேண்டிய வேத அறிவுதான் இந்த அடிப்படை சத்தியமாகும். இதைத்தான் வேதம் மூல உபதேசம் என்றும் கூருகிறது. இந்த அடிப்படை சத்தியத்தின் மூலம் நம் பிதாவாகிய தேவன் யார் என்றும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யார் என்றும், அவர்களின் தன்மைகள் என்ன என்பதையும் அறியலாம்.
மேலும் இந்த புத்தகத்தை படிப்பதின் மூலம் வேதம் கூறுகின்ற விசுவாசம், ஞானஸ்நானம், மனந்திரும்புதல், ஆவியின் வரம், உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு போன்றவற்றின் சாத்தியங்களை கற்றுக்கொண்டு கண்மலையாகிய கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரத்தை போட்டவர்களாய் இருக்க நமக்கு உதவிசெய்யும்.