சர்வ வல்லவரின் அனந்த ஞானத்தில் உள்ள மனிதனை குறித்த யுகங்களின் திட்டங்கள், சிந்திக்கும் கிறிஸ்தவர்களுக்கான தேவனின் விசேஷித்த சத்திய ஆதாரங்கள். உலகம் அறியாத தேவனின் மீட்பின் ஆசீர்வாதங்கள். தேவனின் “கோபத்தின் நாள்” குறித்த வேதத்தின் ஆழமான பதிவுகள் இன்னும் அனேக வேதாகம வசனத்தின் விளக்கங்களை முதல் தொகுதியில் தியானிக்கும்போது ஒவ்வொன்றும் நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகளே.
இந்த புத்தகத்தின் கருத்துகளை திறந்த மனதுடன், தேவ ஆவி வழிநடத்துதல் பெற்றவர்களாக, ஜெப சிந்தனையுடன் தியானித்தல் மிகவும் அவசியமானது. அத்துடன் இந்த புத்தகத்தை வினாவிடை வாயிலாக தியானித்து கற்று வரும் போது தேவனின் திட்டத்தில், நமது நிலையை முற்றிலும் அறியவும், உலக ஜனத்தின் மத்தியில் வேலைக்காரனை போல அல்ல, குமாரனை போல தேவனுக்கு ஊழியம் செய்ய நம் ஒவ்வொருவரையும் ஏவுகிறது.