இந்த புத்தகமானது, வேதாகமத்தில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும் தவறாக போதிக்கப்பட்டும் வருகிற மிக முக்கியமான உபவதசங்களில் ஒன்றான, கிறிஸ்துவின் இரண்டாம் பிரசன்னத்தை தைரியமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைக்கிறது.
கிறிஸ்துவின் இரண்டாம் பிரசன்னம் என்பது, அவர் எதிர் காலத்தில் காணக்கூடிய மகிமையுடன் வானத்திலிருந்து இறங்கி வருகிற ஒரு நிகழ்வாகும் என்ற பொதுவான மற்றும் மிகவும் பிரபலமான விசுவாசத்திற்கு மாறாக, கிறிஸ்துவின் இரண்டாம் பிரசன்னமானது வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி, ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்பதையும் அது ஒரு கண்ணுக்கு தெரியாத பிரசன்னம் என்பதையும் இப்புத்தகமானது நிரூபிக்கின்றது.
இந்த புத்தகமானது நியூ பிரன்ஸ்விக் வேத மாணவ சபையினரால் வெளிவந்த பணி ஆகும். இந்த புத்தகத்தின் ஒவ்வொரு தலைப்புகளுக்கும் உரிய விளக்கங்கள் சகோ.ரசல் அவர்களின் எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சம்பந்தப்பட்ட வசனத்தின் அனைத்து விளக்கவுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.