எபிரேய தீர்க்கதரிசிகளிலேயே மிகப் பிரபலமானவரும், குறிப்பிடத்தக்கவருமான யோனா தீர்க்கதரிசியின் மிக வித்தியாசமான தெய்வீகப் பணியை, விளக்கமாக ஆறு பகுதிகளாக பிரித்து, A.O.ஹட்சன் என்பரால் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
தேவனை விட்டு விரைந்தோடுதல், என்கிற முதல் பகுதியில் தொடங்கி…. 2- வது பகுதியில் சூழல் காற்றின் வலிமை, கப்பலுக்கு உண்டான சேதம், கடும் புயலுக்கு காரணம் யோனாவே என்று கண்டுபிடித்த விதமும்…… 3-வது பகுதியில், இராட்சத திமிங்கலங்கள் கடலில் வாழ்ந்ததிற்கான சான்றுகளும், திமிங்கலத்தின் உடல் அமைப்புகளும், விழுங்கப்பட்ட திமிங்கலத்திற்குள் யோனாவின் 3 நாள் மோசமான அனுபவங்கள் குறித்தும்…. 4-வது பகுதியில், யோனாவை விழுங்கின திமிங்கலத்தின் எலும்புக்கூடே, இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கு சாட்சியாக இருப்பதைக் குறித்தும்… 5-வது பகுதியில், யோனாவின் நினிவே பிரயாணம், நினிவேயின் சிறப்பு மற்றும் தேவ கட்டளையை யோனா அறிவித்த காரியம் குறித்தும்… 6-வது பகுதியில், நினிவேயின் அழிவைக் காணும்படி 40 நாட்கள் யோனாவின் காத்திருப்பும், நினிவேயின் மனந்திரும்புதலும், யோனாவின் கோபமும், தேவன் ஆமணக்குச் செடியின் மூலம் யோனாவுக்கு கற்பித்தப் பாடமும் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மனுஷனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், தெய்வீக கிருபையில் வாழக்கூடிய வாய்ப்பைக் கொடுக்காமல், தேவன் அவர்களை தண்டிப்பதில்லை என்கிற மிகச் சிறந்த பாடத்தை, கற்றுக் கொள்ளும் கோணத்தில் எழுதப்பட்டிப்பதே இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.