இந்த புத்தகம் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற ஒர் அற்புதமான காதாபாத்திரத்தின் வாழ்க்கைப் பற்றின தொகுப்பாகும். அக்காதாபாத்திரம் தலை மற்றும் சரீரமாகிய கிறிஸ்துவின் நிழலான யோசேப்பு ஆகும். நமக்கு அடையாளமாக இருக்கக்கூடிய யோசேப்புடைய வாழ்க்கையின் சம்பவங்களையும் அதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகளையும் புரிந்து பயனடையும் வகையில் சகோதரர் ரசல் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து இப்புத்தகம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. துன்பம் என்னும் பள்ளிக்கூடத்தில் யோசேப்பினுடைய வாழ்க்கையும் அவர் தேவன்மீது வைத்திருந்த அசையாத நம்பிக்கையும் மற்றும் அவர் வெளிப்படுத்தின தெய்வீக குணங்களாகிய பொறுமை சகிப்புத்தன்மை இரக்கம் மன்னித்தில் போன்ற குணங்களில் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாத யோசேப்பு ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகிய நமக்கு எப்படிப்பட்ட முன்மாதிரியாக வாழ்ந்துள்ளார் என்பதை பற்றியும் இந்த புத்தகத்தைப் படிப்பதின் மூலம் ஆழமாக அறிந்து கொள்ளலாம்.