வேதாகம பாட புத்தகம் மற்றும் காவற்கோபுரம் புத்தகங்களின் உதவியோடு, வேதாகமத்தை படிக்காதவர்களுக்கு மேற்ச்சொன்ன புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட சத்தியமானது ஒரு ஊக்கமாகவும், அரணாகவும் இருக்கும்படியாக இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திலுள்ள பாடங்களும் வசனங்களும் இரண்டு கருத்துகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது, நம்மிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் பலமான வசனங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை நாம் எப்பொழுதுமே எடுத்து செல்லும் வகையில் பெரிய பாடங்களை சிறிய வட்டத்தில் இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது. வசனங்களை மனதில் வைக்க திராணியோ அல்லது நேரமோ இல்லாதவர்களுக்கு யார் எப்பொழுது எங்கே கேள்விகள் கேட்டாலும் அவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் “கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்” என்று பதில் சொல்ல இந்த புத்தகம் உதவுகிறது.
இரண்டாவது, குறிப்பிட்ட சத்தியங்களை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த புத்தகத்தில் உள்ள வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. “காரியங்கள் இவ்வாறக இருக்கிறதா!” என்று சிலர் ஊக்கத்தோடு ஆராய்வார்கள் என்னும் நம்பிக்கையுடன் இந்த புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தை குறித்த முழுமையான விளக்கத்திற்காக அந்தந்த பாடத்தின் முடிவில் வேதாகம பாட புத்தகம் அல்லது காவற் கோபுர புத்தகத்தில் எந்த பக்கத்தில் இந்த பாடம் வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த புத்தகத்தின் சிறப்பாகும்.