“What Pastor Russell Said” புத்தகமானது பாஸ்டர் ரசல் அவர்களின், ஏறத்தாழ பன்னிரண்டு வருட மாநாட்டு அறிக்கைகளிலிருந்தும், பல வருட காவற்கோபுர கட்டுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட, அவர் மாத்திரம் பதிலளித்த நூற்றுக்கணக்கான கேள்வி பதில்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இது அவர் பதிலளித்த ஆண்டிற்கு ஏற்ப, அனைத்தும் வகைப்படுத்தப்பட்ட பட்டியலாக உருவாக்கி, அட்டையிடப்பட்ட பெரிய புத்தக வடிவில் அப்பொழுது கிட்டத்தட்ட எழுநூறு பக்கங்கள் கொண்ட தொகுதியாக உருவாயிற்று. தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகளுக்காகவே அது தயாரிக்கப்பட்டது.
அந்த நூற்றுக்கணக்கான கேள்வி பதில்கள் கொண்ட புத்தகத்திலிருந்து முதல் 500 கேள்வி-பதில்கள் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.