ஏன் (அ) எதின் அடிப்படையில் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏனெனில் உலகில் இன்று அநேகர் மற்றும் அநேக நாடுகள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்து கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய வேதாகமத்தில் யார் கிறிஸ்தவன் என்றும், எதன் அடிப்படையில் கிறிஸ்தவன் என்பதற்கும் தகுந்த காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வேதத்தின் அடிப்படையில் கிறிஸ்தவன் என்பவன் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவன் (அ) இயேசுவின் மாணவன் ஆவான்.இன்னும் விவரமாக சொல்லவேண்டுமெனில் இயேசு கிறிஸ்துவின் போதனையை கேட்டு அதன்படி கீழ்படிபவனே கிறிஸ்தவன். இப்புத்தகத்தை படிப்பதன் மூலமாக கிறிஸ்தவ அழைப்பின் மேன்மை என்ன என்றும் அனுதினமும் எப்படி கிறிஸ்தவனாக வாழ வேண்டும் என்றும் அதற்கான தகுதிகள் என்ன என்றும் கற்றுக் கொண்டு அதற்கேற்ப நம்மை அற்பணிக்க உதவியாக இருக்கும்