• விமர்சிப்பதற்கென்று தேவசெய்தியைக் கேட்கும் நபராய் இராதே. இலக்கணங்களிலும், சைகைகளிலும் மற்றும் விவரிப்புகளிலும் வெளிப்படும் பிழைகளைக் கண்டுபிடிப்பதற்கென்று விழிப்பாய் இராதே.
• பிழைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து, மற்றவர்மீது வீசும் நபராய் இராதே.
• பரிசேயனைப்போன்று, “கையும் களவுமாய்ப் பிடிக்கவேண்டும்” என்ற நோக்கத்தில், தேவ செய்தியில் பிழைகளைத் தேடும் வேட்டைக்காரனாய் இராதே.
• வழங்கப்படும் தேவசெய்தி, யார் யாருக்குப் பொருந்தும் என்று மற்றவர்களுக்குப் பொருத்தம் பார்க்கின்றவனாய் இராதே.
• விமர்சிப்பதற்கென்று தன்னைத்தானே நியமித்துக்கொண்ட விமர்சகனாய் இராதே.
• தேவசெய்தியில் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் (ஆம் என்று) ஒப்புக்கொண்டாக வேண்டும் என நீயாகவே கற்பனை செய்துகொள்ளாதே.
• தேவசெய்தி உனக்குப் பிரயோஜனம் உண்டாக வந்துள்ளதே ஒழிய, உன்னைச் சிரிப்பூட்டி மகிழ்விப்பதற்காக அல்ல. நீ இன்னும் சிறந்த நபராகுவதும், வளருவதும்தான் அதன் நோக்கமாகும்.
• ஜெபத்துடனும், காத்திருப்புடனும், உன் மனதை ஆயத்தப்படுத்தி, பாடத்தைக் கேள்.
• பரிவுள்ள மனதுடனும், திறந்த மனதுடனும் பாடத்தைக் கேள். செய்திகொடுப்பவர் உன்னைவிட சிறந்தவர் என்று எண்ணம்கொண்டவனாக, தாழ்மையான மனதுடன் தேவசெய்தியைக் கேள். உன்னுடைய தப்பெண்ணங்களைச் சரிசெய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் பாடத்தைக் கேள்.
• உனக்கு உதவியாகக் காணப்பட வாய்ப்புள்ள கருத்துகளையும், வசனங்களையும் மற்றும் பாடங்களையும் உனக்கு நீயே நினைப்பூட்டிக்கொள்.
• எந்த ஒரு பேச்சாளனும், தான் பேசவேண்டும் என்று நினைத்திருந்தவைகளையெல்லாம், தேவசெய்தியில் முழுமையாகப் பேசமுடிகிறதில்லை என்பதை நினைவில்கொள்.
• ஒரு தேவசெய்தியானது ஜெபத்தோடு உள்வாங்கப்பட்டால், இன்னுமாக ஜெபத்துடன் செவி கொடுத்து கவனிக்கப்பட்டால், இன்னுமாக திறந்த மனங்களுடனும், பரிவுள்ள, தாழ்மையுள்ள, பரஸ்பரமுள்ள மற்றும் ஆவியினால் நீர்ப்பாய்ச்சப்பட்ட மனங்களுடனும் கேட்கப்பட்டால்… அது அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.