நமது கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தில் நீங்கள் கனிகொடுக்கின்ற ஒருவராக இருக்கின்றீர்களா? அவருக்கு மகிமை உண்டாகும்படிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ நாடிக்கொண்டிருக்கின்றீர்களா? ஜனங்களுக்குத் தெரியாத நிலையிலும் மற்றும் அவர்களால் பார்க்கப்படாத நிலையிலும், “தனிமையில் கனிகின்ற கனிகளைத்தான்” அவர் மிகவும் விலையேறப்பெற்றதாய் மதிக்கின்றார்; அமைதியான தாழ்மையுள்ள வாழ்க்கைமுறை, மனத்தாழ்மை, மனப்பூர்வமான இருதயம், சுய-நலமற்ற ஆவி, விளம்பரப்படுத்தாத/ஆரவாரமற்ற அன்பு இவையே உங்கள் பரலோகப் பிதா விரும்புகின்ற மற்றும் அவருக்கு மகிமை சேர்க்கின்ற சில “கனிகள்” ஆகும்.
BIBLE STUDENT ARCHIVES