அலைகளை உருவாக்குதல்

ஜனவரி - 2025

சிறுவன் ஒருவன் முதல்முறையாக தான் வாங்கின சிறு விளையாட்டு படகினை, கயிறு கட்டி தண்ணீரில் ஓடவிட்டு விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென்று கயிறு அவன் கையிலிருந்து நழுவி தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. கயிறைப் பிடிக்க அவன் எவ்வளவோ முயன்றும், அவனால் பிடிக்க முடியவில்லை; படகும் அவனுக்கு எட்டாத தூரத்திற்குச் சென்றுவிட்டது. அதை மீட்டுத்தருமாறு அச்சிறுவன் தன் அண்ணனிடம் கேட்டுக்கொண்டான். அவனது அண்ணனோ எந்தப் பதிலும் பேசாமல், கற்களை எடுத்து, படகிற்கு அப்பால் எறிய ஆரம்பித்தான். தனது வேண்டுகோளை அண்ணன் கண்டுகொள்ளவில்லை என்றும், அண்ணன் நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றான் என்றும் அச்சிறுவனுக்குத் தோன்றினது. ஆனால் அந்தோ! முதல் கல் தண்ணீரில் எறியப்பட்டபோது, சிறு அலை உருவாகுவதை அச்சிறுவன் கவனித்தான். ஒவ்வொரு கல்லும், மேலும்மேலும் அலைகளை உருவாக்கி, படகை கரை நோக்கி மெல்லமெல்ல தள்ளிக்கொண்டிருந்தது. எது அழிவை கொண்டு வருவதுபோன்று தோற்றமளித்ததோ, அதுவே அந்தச் சிறிய படகைக் காப்பாற்றியது!

நம் வாழ்க்கையிலும், பலசமயங்களில் துன்பத்திற்குமேல் துன்பம் வந்துகொண்டிருப்பது போன்று தோன்றலாம். இதற்கான காரணம் என்ன என்பதுகூட வெளிப்படாமல் காணப்படலாம். ஆனால் முற்றிலுமான அழிவைக் கொண்டுவருவதுபோன்று எந்தப் பேரலைகள் காணப்படுகின்றதோ, அவை உண்மையில் நம்மை தேவனிடம் நெருக்கமாக கொண்டுவருபவைகளாக இருக்கும். “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.” (ஏசாயா 12:2)

-Devotions
Bible Student’s Library