ஒருவேளை தேவன்

டிசம்பர் - 2024

* நாம் நேற்றையதினம் தேவனுக்கு நன்றி செலுத்தத்தக்கதாக நேரம் ஒதுக்கவில்லை என்பதற்காக, ஒருவேளை இன்று நம்மை ஆசீர்வதிப்பதற்கென்று தேவனும் நேரம் ஒதுக்காமலிருக்கத் தீர்மானிப்பாரானால்…

* நாம் இன்றையதினம் அவரது வழிகாட்டுதலின்படி நடக்கவில்லை என்பதற்காக, ஒருவேளை நாளை நமக்கு வழிகாட்ட வேண்டாமெனத் தேவனும் தீர்மானிப்பாரானால்…

* மழையை அவர் பெய்யப்பண்ணினதற்காக நாம் முறுமுறுத்ததால், ஒருவேளை இன்னொரு மலர் மலர்வதை நாம் காணாதபடிக்குத் தேவனும் மழையைத் தடைபண்ணத் தீர்மானிப்பாரானால்…

* அவர் நேற்றையதினம் நம்மோடுகூட நடந்துவந்ததை நாம் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக, ஒருவேளை அவரும் இன்று நம்மோடுகூட நடந்து வராமலிருக்கத் தீர்மானிப்பாரானால்….

* நாம் இன்று வேதத்தை வாசியாமல் இருந்ததற்காக, ஒருவேளை அவரும் நாளை வேதத்தைப் புறம்பாக்கிப்போடத் தீர்மானிப்பாரானால்…

* அவர் அனுப்பின செய்தியைச் செவிகொடுத்துக் கேட்பதற்கு நாம் தவறிப்போனதற்காக, ஒருவேளை அவரும் செய்தியை அனுப்பிவைக்காமலிருப்பதற்குத் தீர்மானிப்பாரானால்…

* நம்முடைய இருதயத்தின் கதவுகளை நாம் திறக்காமல் இருந்ததற்காக, ஒருவேளை அவரும் வேத ஆராய்ச்சிக்கான கதவைப் பூட்டிப்போடத் தீர்மானிப்பாரானால் …

* மற்றவர்களை நாம் அன்புகூராமலும், கவனியாமலும் இருந்ததற்காக, ஒருவேளை அவரும் நம்மை அன்புகூருவதையும், கவனிப்பதையும் நிறுத்திவிடத் தீர்மானிப்பாரானால்…

* நேற்றைய தினத்தில் அவருக்கு நாம் செவிகொடுக்காமல் இருந்ததற்காக, ஒருவேளை அவரும் இன்று நமக்குச் செவிகொடுக்காமலிருக்கத் தீர்மானிப்பாரானால்…

* அவர் ஊழியத்திற்கு அழைத்தபோது நாம் எப்படியெல்லாம் சரிவர பதில்கொடுக்காமல் இருந்தோமோ அதே விதத்தில், ஒருவேளை அவரும் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில்கொடுக்காமலிருக்கத் தீர்மானிப்பாரானால்…

* நம்முடைய ஜீவியங்களை நாம் அவருக்காக எப்படியெல்லாம் சரிவர கொடுக்காமல் இருந்தோமோ அதே விதத்தில், ஒருவேளை அவரும் நம் தேவைகளைச் சந்திக்கும் விஷயத்தில் சரிவர நடந்துகொள்ளாமலிருக்கத் தீர்மானிப்பாரானால்…

“எங்களுடைய பாவங்களுக்குத்தக்கதாக எங்களுக்குச் செய்யாமலும், எங்களுடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக எங்களுக்குச் சரிக்கட்டாமலும் நீர் இருப்பதற்காக,” ஓ கர்த்தாவே, நன்றியுள்ளவர்களாக நாங்கள் காணப்படும்படிக்கு, எங்களுக்கு உதவிசெய்வீராக. சங்கீதம் 103:10

– Devotions
Bible Student’s Library