ஜெபித்தலும், ஜீவித்தலும்

“பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.” (யோவான் 9:31)

நீ ஜெபம் (அல்லது) விண்ணப்பம் பண்ணினதற்கு ஏற்றபடி வாழ்ந்திடுவதற்கு எப்போதும் முயற்சிக்கின்றவனாய் இரு. ஒரு நாளைத் தேவனுடன் ஆரம்பித்துக்கொண்டு, பின்னர் நாள் முழுவதையும் பிசாசுடன் செலவழிப்பதில் பிரயோஜனம் இல்லை; காலையில் உந்தன் (ஜெப) அறையில் பரிசுத்தவானாய் இருப்பதிலும், பின்னர் நாள் முழுவதும் உலகத்தில் பாவியாய்க் காணப்படுவதிலும் பிரயோஜனம் இல்லை.

பாவம் ஒன்றை மேற்கொள்ள நீ ஜெபம் ஏறெடுத்துள்ளாயாகில், அப்பாவம் தவிர்த்து, செய்வதற்குரிய தருணங்களையும், சோதனைகளையும் அப்பாவத்திற்கு எதிராய் நீ விழிப்புடன் இருக்கின்றாயா என்று பார்த்துக்கொள்; இப்படியாக நீ செய்யவில்லையெனில், நீ சோதனையில் தோற்றுவிடுவாய்.

ஜீவியத்தில் பரிசுத்தம் வேண்டுமென நீ ஜெபம் ஏறெடுத்துள்ளாயாகில், பரிசுத்தமாய் ஜீவித்திட கடுமையாய் முயற்சிசெய்.

தாழ்மை வேண்டுமென நீ ஜெபம் ஏறெடுத்துள்ளாயாகில், தாழ்மையுடன் நடப்பதற்குக் கடுமையாய் முயற்சிசெய்.

தெளிந்த புத்தியும், இச்சையடக்கமும் வேண்டுமென நீ ஜெபம் ஏறெடுத்துள்ளாயாகில், தெளிந்த புத்தியுடனும், இச்சையடக்கத்துடனும் வாழ்ந்திட கடுமையாய் முயற்சிசெய்.

ஆவியில் ஜெபம் ஏறெடுத்துள்ள நீ, ஆவியில் நடப்பதற்குக் கடுமையாய் முயற்சிசெய்.

ஒன்றிற்காக ஜெபித்துவிட்டு (அல்லது) வேண்டுதல் செய்துவிட்டு, இன்னொரு விதமாக வாழ்வது என்பது முரண்பாடான காரியமாகவும், தேவபக்தியில்லாத காரியமாகவும் இருக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்.

ஒருவனுடைய ஜீவியத்தின் முழுப்போக்கும், அவனது ஜெபத்தினுடைய நறுமணத்தினால் மணமூட்டப்பட வேண்டும். யாரொருவன் தன்னுடைய ஜெபத்தில் (மாத்திரம்) அனைத்துப் பயபக்தியையும் கொண்டிருக்கின்றானோ, அவனிடத்தில் (உண்மையில்) பயபக்தியே இல்லை.

R585 [தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்]