மூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் பாஸ்டரல் பைபிள் இன்ஸ்டிட்யூட்டால் வெளியிடப்பட்ட, Acceptable sacrifices என்கிற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமாகும். இந்தப்புத்தகம், பாவநிவாரணாப் பலிகளைக் குறித்தக் காரியங்களை வேத வனங்களை மையமாக கொண்டு, மூன்று பகுதிகளாக ஆராயப்பட்டுள்ளது. முதல் பகுதியில், இயேசுகிறிஸ்துவை மையமாகக் கொண்டு, அவர் கொடுத்த ஈடுபலியின் மூலம் சபை மற்றும் ஒட்டு மொத்த மனுக்குலமும் மரண இருளில் இருந்து மீட்கப்பட்டு, இரட்சிக்கப்படுவதுப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியானது, ஆசாரிப்புக் கூடாரத்தின் வெளியரங்கமான அமைப்பு மற்றும் அதின் பொருள்களைப் பற்றியும், தேவன் இதை மறைத்து வைத்ததின் நோக்கம், திரைகள் மற்றும் ஆசாரியர்கள் செலுத்தும் பலிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் ஆசாரிப்புக் கூடாரத்தில் செலுத்தப்பட்ட பலிகளின் ஆவிக்குரிய அர்த்தம் பற்றியும், கிறிஸ்துவுக்கு நாம் உடன் பங்காளிகளாகிற சிலாக்கியத்தை பெறும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் பற்றியும் இந்த புத்தகம் விளக்குகிறது.