முற்பிதாக்கள் எனும் இப்புத்தகம், தனிப்பட்ட முற்பிதாக்களின் வாழ்க்கைப் பற்றின பாடங்களைக் கொண்டதாயிராமல், முற்பிதாக்கள் என்ற வகுப்பாரைக் குறித்து ஏழாம் தூதனால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு மற்றும் மொழியாக்கம் ஆகும். இப்புத்தகத்தில் முற்பிதாக்கள் வகுப்பாரின் அழைப்பு குறித்தும், அவர்களிடத்தில் தேவனால் பார்க்கப்பட்ட மற்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட குணங்கள் குறித்தும், அவர்களுக்கான உயிர்த்தெழுதல் மற்றும் எதிர்கால ஊழியங்கள் மற்றும் எதிர்கால ஆசீர்வாதங்கள் குறித்தும் இடம்பெறுகின்றன.
இன்னுமாக இவர்கள்,
1.ஆயிரம் வருஷ யுகத்தின்போது, புது உடன்படிக்கையின் கீழ்க்காணப்படுவார்களா? / இல்லையா? மற்றும் இதன் அவசியம் இருக்குமா?
2. உயிர்த்தெழுந்து இவர்கள் வரும்போது தேவனுடன் நேரடியான உறவிற்குள்ளாக இருப்பார்களா? / இல்லையா?
3. உயிர்த்தெழுந்து இவர்கள் வரும்போது, நித்திய ஜீவனுக்கான உரிமை
உடையவர்களாக இருப்பார்களா? / இல்லையா?
4. உயிர்த்தெழுந்த பிற்பாடு இவர்களுக்குப் பாடுகள் உண்டா? / இல்லையா?
5. ஆயிர வருஷ யுகத்தின் முடிவில் இவர்களுக்கு கூடுதலான ஆசீர்வாதங்கள்
உள்ளதா?
6. இவர்கள் எதற்காக நீதிமான்களாக்கப்பட்டார்கள்?
என்பதுபோன்ற அநேக சுவாரசியமான கேள்விகளுக்குரிய ஏழாம் தூதனின் திட்டவட்டமான கருத்துகளையும், அதேசமயம் அவரது அநேகம் யூகங்களையும் உள்ளடக்கிக் காணப்படும் கட்டுரைகளின் மொழியாக்கத்தினை இப்புத்தகத்தில் காணலாம்.