சகோதரர் ஆண்டன் ஃபீரே அவர்கள், வனாந்திரத்தில் இருந்த ஆசரிப்புகூடாரத்தைப் பற்றின தனது நுணுக்கமான குறிப்புகளுக்காக மிக நன்றாய் அறியப்பட்டவர். மற்ற பாடங்களை பற்றின அவரது அதே இணையான உன்னிப்பான குறிப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்றது இந்த புத்தகம்.
சகோதரர் ஆண்டன் ஃபீரே அவர்கள் வெளியிட்ட இந்த புத்தகத்தில் பஸ்கா பற்றின குறிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பான நினைவுகூருதல் பற்றியதான அனைத்து விஷயங்களையும் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து வடிவமைத்து கொடுத்துள்ளார். இதில் பஸ்காவின் நிழல் – பொருளாக மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்துவின் ஈடுபலி, ஆயிரவருட யுகத்தில் இஸ்ரயேலர்களது நிலை, மரியாள்களை பற்றியும், தானியேலின் தீர்க்கதரிசனங்கள், லூசிபராக இருந்த சாத்தான் மற்றும் புது உடன்படிக்கையின் இரத்தம் பற்றியும் குறிப்பிடப்பட்டவை சிறப்புமிக்கவைகள். இவரது குறிப்புகளின் பெரும்பகுதி மற்ற ஆதாரங்களிலிருந்து, அதிலும் குறிப்பாக சகோதரர் ரசல் அவர்கள் எழுதிய நூல்களிலிருந்து வந்த மேற்கோள்களாகும். இதில் இயேசு கிறிஸ்து மூலம், சகோதர அன்பும் ஐக்கியத்தையும், ஆசீர்வாதங்களை பற்றியும் இந்த நூலில் நாம் கற்றுக்கொள்ளலாம்.