
கிறிஸ்துவின் வாழ்க்கை
கிறிஸ்துவின் வாழ்க்கை
தேவனுடைய தெய்வீக திட்டத்தை முழுமையாகப் புரிந்துக்கொள்ள எவ்வளவு பிரயாசம் எடுத்தாலும் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கைக்குறித்து கற்றுக்கொள்ளாமல் தேவனுடைய திட்டம் பற்றிய எந்த அறிவும் முழுமையடைவதில்லை. தேவத்திட்டத்தின் மையமாக இருக்கும் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையும் அவர் செய்த தியாகங்களையும் அறிந்துக்கொள்வதையும் தவிர ஜீவனுக்கு போக வேறு வழிக் காட்டியும் இல்லை. ஆண்டவரின் பாதத்தருகே உட்கார்ந்து, அவரிடமிருந்து நேரடியாக கற்றுக்கொள்வது என்பது அப்போஸ்தலர்களுக்கு அருமையான அனுபவமாக இருந்திருக்கும். ஆனால், அப்போஸ்தலர்களைக்போன்று நேரடியாக அவரின் வார்த்தையை கேட்க நம்மால் முடியவிட்டாலும் ஏற்றவேளையில் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலம் திரளான சத்தியங்களை கிடைக்க பெற்றிருக்கிறோம். நாம் எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும், எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்றும், எப்படி தேவனுக்கேற்ற குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கர்த்தர் நமக்கு கற்றுக்கொடுத்ததை கட்டுரைகளாக இப்புத்தகம் நமக்கு தருகிறது.
இயேசுவே மேசியா என்றும், தேவஆட்டுக்குட்டி என்றும் அறிவித்த யோவான்ஸ்நானகனின் பிரசங்கம் முதல் இயேசுகிறிஸ்து மரித்து பரமேறும் வரை உள்ள சம்பவங்களை இப்புத்தகத்தில் படிக்கும்போது அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மை மறுரூபம் அடையச்செய்கிறது.