வேதமும் புராணமும் என்ற இந்த புத்தகத்தில், சிருஷ்டிகரைத் தொழுதுக் கொள்ளாமல், எப்படியெல்லாம் சிருஷ்டியைத் தொழுவார்கள் என்பதைப் பற்றியும் எதற்காக தொழுதார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக இடம் பெற்றுள்ளது. மேலும் இவற்றை யார் பரப்பினார்கள், எப்படி பரப்பினார்கள் என்பதை பற்றியும் நாம் அறிந்துக் கொள்ளலாம். இதில் தேவ ஜனமாகிய இஸ்ரயேல் ஜனங்களும் அந்நிய தேவர்களை பின்பற்றி, சோரம் போன காரியங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து கிறிஸ்தவ மண்டலமும் விக்கிரக வணக்கத்திற்குள் சென்ற காரியங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் நமது அடிப்படை சத்தியங்களில் ஒன்றான “கிறிஸ்துமஸ்” எப்படி உண்டானது? இதற்கு காரணம் என்ன? என்பதும் இடம் பெற்றுள்ளது சிறப்பிற்குரியது. ஆகவே இந்த புத்தகத்தில், சாத்தான் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த மனுகுலத்தின் கண்களையும் குருடாக்கி கட்டுக் கதைகளை நம்ப வைத்து, ஏமாற்றியுள்ளார் என்பது நமக்கு எச்சரிக்கும் பாடமாகவும் உள்ளது. (2கொரி 4:4)