கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, வேத மாணவர் பாடல்கள் என்ற இந்த புத்தகத்தின் நோக்கம் என்னவென்றால், நாம் அநேக சத்தியத்தை ஆராய்ந்து அறிந்தவர்களாக இருந்தாலும், நம்முடைய தேவன் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவராகவும் இருக்கிறார் (சங் 22:3) என்று தாவீது பாடியுள்ளார். நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்கு துதி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். எனவே தான் தாவீது பாடின அநேக பாடல்கள் நமது வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் புத்தகத்தில் முதலாவதாக வேத மாணவர்களுக்கான விசுவாச பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கும். நம்முடைய பிதாவாகிய தேவன் ஆராதிப்பதற்காக ஆராதனைப் பாடல்கள், ஞானஸ்நானப் பாடல்கள், திருமணப் பாடல்கள், நித்திரைப் பாடல்கள் மேலும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நினைவுகூறுதல் நாளுக்கான பாடல்கள், விசேஷப் பாடல்கள் மற்றும் ஆங்கில பாடல்கள் என்று நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை துதித்து பாடி தேவனையும் கிறிஸ்துவையும் மகிமைப்படுத்துவோமாக.