
பெரேயரின் கேள்விகள் – தொகுதி – 2
பெரேயரின் கேள்விகள் – தொகுதி – 2
தேவனுக்குள்ளே ஆதி காலங்கள் முதல் மறைந்திருந்த ரகசியங்களை, அவருடைய ஏற்ற கால தாசரின் வாயிலாக “காலம் சமீபமாயிருக்கிறது” என்ற புத்தகத்தின் மூலம், ரகசியங்களை அறிவிக்கிற பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்.
இந்த புத்தகத்தில், நமது ஆண்டவரின் முதல் மற்றும் இரண்டாம் வருகையின் தீர்க்கதரிசன நிறைவேறுதல், இணையான யுகங்களின் கால அட்டவணைகள், புறஜாதியாரின் ஆதிக்க காலங்கள், ஆதாமின் சிருஷ்டிப்பின் கால அட்டவணை, பாவம் மனுஷனின் காலங்கள், இன்னும் நுணுக்கமான தீர்க்கதரிசன நிறைவேறுதல்களின் காலங்களை நாம் அறியும்போது நம் கர்த்தருடைய நாளில் இருக்கிறோம் என்பதும், வெகுவிரைவாக அவருடைய எல்லா பரிசுத்தவான்களுடன் உயிர்த்தெழுதலில் மறுரூபத்தால், அவரோடு கூட சேர்க்கப்படுவோம் என்றும் அறிந்து உணர செய்கிறது. இதன் மூலம் நமக்கு ஊக்கம் அளித்து, துணிவூட்டி, உலகில் நமக்கு ஏற்படும் பயம் மற்றும் உலகத்தின் மேல் வைக்கும் ஆசைகளில் இருந்து பிரித்தெடுத்து, ஆண்டவரைப் பற்றி இருக்க செய்கிறது.
இத்தகைய “காலம் சமீபமாயிருக்கிறது” என்ற விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை வினா-விடை வாயிலாக, மேலும் ஆழ்ந்து, தேவ ஆவியின் துணையோடு, தியானிக்கும் போது, நமது கண்கள் எப்பொழுதும் ஆண்டவரை நோக்கி இருக்க செய்கிறது.