ஒவ்வொரு புதுசிருஷ்டியும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை மற்றும் ஆழ்ந்த சத்தியத்தை மிக தெளிவாக எடுத்துரைக்கும் பொக்கிஷமாக உள்ள ஆறாவது தொகுதி, தேவனின் சுத்த கிருபையினாலே நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது…
இந்தப் புத்தகத்தின் வாயிலாக, தேவன் தன்னுடைய ஜனங்களை மீட்டெடுத்து, அழைத்து, தேர்ந்தெடுத்து, தகுதிப்படுத்தி, இம்மையிலும் மறுமையிலும் வழிநடத்தும் விதம் ஒவ்வொன்றும் தியானிக்கும் போது ஆச்சரியமானவைகளே.
இத்தகைய விலைமதிப்பற்ற புத்தகத்தினை மேலோட்டமாக படிப்பதைக் காட்டிலும், பெரோயா பட்டணத்தார் போன்று மனோ வாஞ்சையாக, வினா விடை வாயிலாக, தியானிக்கும் போது அதன் ஆழமான காரியங்களை(சத்தியங்களை) உணர வைப்பதற்கு இந்த புத்தகம் உதவியாக இருக்கும்.